ஒற்றுமையை வளர்ப்போம் என்று அரசு அதிகாரிகளின் உறுதிமொழி ஏற்பு குரல் அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் ஒலித்தது. எதற்காக தெரியுங்களா?


சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம், ஆண்டுதோறும் டிசம்பர் 3 அன்று கொண்டாடப்படுகிறது. இது ஊனமுற்ற நபர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்பை அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தை உலகளாவிய நினைவூட்டலாக செயல்படுகிறது. இந்த ஆண்டிற்கான கருப்பொருள், "உள்ளடக்கமான மற்றும் நிலையான எதிர்காலத்திற்காக மாற்றுத்திறனாளிகளின் தலைமைத்துவத்தை விரிவுபடுத்துதல்" ஆகும்.


ஊனமுற்ற நபர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவும் அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்தவும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான உலகளாவிய அர்ப்பணிப்புகளை மேலும் வலுப்படுத்தியது. நிலையான வளர்ச்சிக்கான 2030 நிகழ்ச்சி நிரலின் பரந்த இலக்குகளுடன் அவற்றை இணைத்தது. ஊனமுற்றோர் உரிமைகளை நிவர்த்தி செய்வதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான தடையற்ற சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கிய முயற்சியாகும்.


இந்த பிரச்சாரம் பொது உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளது, ஒவ்வொரு இந்தியனும், திறமையைப் பொருட்படுத்தாமல், முழுமையான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கையை வாழத் தேவையான ஆதாரங்களை அணுகுவதை உறுதிசெய்கிறது. இத்தகைய மாற்றுத்திறனாளிகள் தினம் இன்று நடந்தது.




இதைஒட்டி அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு ஒற்றுமையை வளர்ப்போம் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வாசிக்க அனைத்து துறை அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர். 
 
மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஒற்றுமையை வளர்ப்போம் உறுதிமொழியான “சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காகவும் அவர்களின் நலனுக்காகவும் எப்போதும் உடன் நிற்போம் என்றும், அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டுத் தளத்தில் அவர்களுக்கு இருக்கக்கூடிய சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வை உருவாக்க எங்களாலான அனைத்து முயற்சிகளையும் செய்வோம் என்றும் உறுதி கூறுகிறோம்.


முழுமையாகவும், சமத்துவத்துடனும் வெற்றிகரமாகவும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் இங்கு எந்தப் பாகுபாடும் இன்றி, அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ்வதற்குரிய பாதுகாப்பை அவர்களுக்கு அளிப்பது இன்றியமையாதது என நாங்கள் உணர்ந்திருக்கிறோம். அவர்களை எங்கள் குடும்பத்தில் ஒருவராக கருதி நட்புணவர்வை வளர்ப்போம் என்றும் உறுதிமொழி ஏற்கிறோம்” என மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வாசித்தார். இதை அனைத்து அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.


மேலும், மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்விற்காக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில், மாவட்ட ஆட்சியரத்தில் ஊதா (Purple) நிறத்தில் ஒளியூட்டப்பட்டது.


நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மஞ்சுளா, மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.