நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருபத்தி ஏழு மீனவ கிராமங்கள் உள்ளது இங்கு 500 விசைப் படகுகளும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் உள்ளன. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்குச் சென்று பிடித்து வரும் மீனை துறைமுகம் மற்றும் அந்தந்த கடற்கரைப் பகுதிகளில் விற்பது வழக்கம். வழக்கம்போல அக்கரைப்பேட்டை மீன்பிடி முகத்திலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று சென்றவர்கள். இன்று மீன் பிடித்து கரைக்கு மீனவர்கள் திரும்பிய பொழுது ஒரு நாட்டுப் படகு ஒருவரின் வலையில் அதிசய முதலை மீன் ஒன்று சிக்கியது. தலை அச்சு அசல் முதலை போலவும் உடல் முதலையின் கடினமான தோல் போலவும் இருந்துள்ளது. இதனை சக மீனவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். மேலும் சிலர் இது மீன் இல்லை என விமர்சனமும் செய்துள்ளனர். 3 அடி நீளமும் 10 கிலோ எடையும் கொண்டிருந்தது.
கரைக்கு கொண்டு வந்து வலையில்ல் இருந்து எடுக்கும்பொழுது மீன் உயிரோடு இருந்ததாகவும் பதப்படுத்துவதற்காக ஐசில் வைத்தபோது இறந்துவிட்டதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர். திருவாரூர் தஞ்சாவூர் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீன் வியாபாரிகள் வந்திருந்தனர். இதேபோல் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த மீன் வியாபாரிகள் அதிசய முதலை மீனை வாங்க முன்வரவில்லை. மேலும் பிடித்து வந்த முதலை மீனை இது முதலை குட்டி இல்லை முதலை என்றால் அதற்கு கால்கள் இருக்கும் இது மீன் தான் சேவல் மற்றும் துடுப்பு உள்ளது என்றே மீனை எடுத்து விளக்கி காட்டிய பிறகு வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த கேரளாவைச் சேர்ந்தவர் ஒருவழியாக இந்த முதலை மீனை சமைத்தவுடன் ருசியை அறியலாம் என ஆர்வத்துடன் வாங்கிச் சென்றார். நாகை மீன்பிடி துறைமுகத்தில் முதலை குட்டியா அல்லது மீனா என ஒரு பட்டிமன்றமே மீனவர்கள் மற்றும் வியாபாரிகள் இடையே நடைபெற்றது அங்கு நகைச்சுவையான சூழ்நிலை நிலவியது.