மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள அரசு மருத்துவமனை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறை மாவட்டமாக பிரிக்கப்பட்டது. அடுத்து சீர்காழி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனை பெயரளவில் மட்டுமே தலைமை மருத்துவமனையாக செயல்பட்டு வருகின்றது. மேலும் தொடர்ச்சியாக இங்கு மருத்துவர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதுகுறித்து பலமுறை பல்வேறு ஊடகங்களில் செய்திகளும் வெளியாகி இருக்கின்றன.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்காவை சுற்றியுள்ள நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த கிராமப்புற ஏழை மக்கள் சீர்காழி அரசு தலைமை மருத்துவமனையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் பற்றாக்குறை சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால், சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் மருத்துவமனை நிர்வாக அலுவலகத்தில் வேலை பார்க்கும் மருத்துவர் அல்லாத அலுவலர்கள் நோயாளிகளை ஏமாற்றும் விதமாக தங்களை மருத்துவர்கள் போல சித்தரித்துக்கு வரக்கூடியவர்களுக்கு என்னவென்று கேட்டு அவர்களுக்கு மருந்து மாத்திரைகளை சீட்டில் எழுதி கொடுத்து வருகின்றனர்.
Maamannan New Poster: அட மிரட்டலா இருக்கே...! மாமன்னன் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு..!
தற்போது மருத்துவமனையில் உள்ள மருத்துவ காப்பீடு அலுவலர் நோயாளிகளுக்கு மருத்துவர் போல சிகிச்சை அளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டு, பொதுமக்கள் அதுவும் ஏழை எளிய மக்களின் உயிரில் விளையாடி ஏதேனும் உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன் உரிய மருத்துவர்களை நியமித்து மக்களை காப்பாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Rajesh Doss: பாலியல் வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் குற்றவாளி - தீர்ப்பு விவரம் என்ன ?