தஞ்சாவூர் மகர்நோன்புசாவடியிலுள்ள தனியார் பள்ளியில் நடைபெறும் புள்ளியியல் சார்நிலைப் பணியிடங்களுக்கான தேர்வை ஆய்வு செய்த ஆணையத் தலைவர் கா.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாட்டில் 9 ஆம் நடைபெற வேண்டிய தேர்வுகள் பொது முடக்கம் காரணமாக 11ஆம் தேதி நடைபெறுகின்றது. தமிழகத்தில் 32262 தேர்வர்கள், 9 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 79 மையங்களில் ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணியிடங்களுக்கான தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. காலை மற்றும் மாலை தேர்வும் நடைபெறுகிறது.
இன்று இரவு அல்லது அதிகாலை முடிக்கப்பட்ட தேர்வுகளின் அதற்கான ஒஎம்ஆர் ஷீட்டை தேர்வு ஆணையத்திற்கு கொண்டு வரப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. ஒஎம்ஆர் ஷீட்டை ஸ்கேன் செய்ததால் தான் கண்டுபிடிக்கமுடியும். வருகின்ற வழியிலேயே திருத்த முடியாத அளவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஒன் டைம் லாக் செய்வதால், உடைந்திருந்தால், மதிப்பெண் போட முடியாது. ஒஎம்ஆர் ஷீட்டை எடுத்து வரும்போது, வேனில் உள்ளே சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. தேர்வர்கள் வந்தவுடன் கிருமி நாசினி வழங்கி, டெப்ரேச்சர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பாதிப்புகள் தெரிந்திருந்தால், தனி ஹாலில் வைத்து தேர்வு எழுதும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தேர்வர்களுக்கு அனைத்து ஏற்பாடுகள் செய்துள்ளதால், சங்கடம் வந்துவிடும் என்பதாலும், தேர்வுக்கான பொருட்களும் பணிகளும் வைக்க வேண்டும் என்பதால், இரண்டு நாட்களுக்குள் வைக்கப்பட்டுள்ளது.
இனி வரக்கூடிய காலங்களில் தேர்வுகள் தமிழ் வழியில் நடத்தப்படும். தற்போது நடைபெறும் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிட்டபோது, தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வெளியாகாததால் வழக்கம்போல நடைபெறுகிறது.- அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேர்வில் இருவிதமான பணிகள் இருக்கும். குரூப்-4 தேர்வில் கொள்குறி வகை (அப்ஜக்டிவ் டைப்) தமிழில் இருக்கும். மற்ற குரூப் 1, 2, 2ஏ ஆகிய தேர்வுகளில் விரிந்துரைக்கும் வகையிலான (டெஸ்கிரிப்டிவ்) வினாத்தாள் இருக்கும். இதில் 40 மதிப்பெண்களுக்கும் அதிகமாக எடுத்தால் மட்டுமே மற்ற கேள்விகளுக்கான பதில்கள் திருத்தப்படும்.
குரூப்-4 தேர்விலும் 40-க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றால்தான் தொடர்ந்து அவர்கள் எழுதிய அனைத்து விடைகளும் மதிப்பீடு செய்யப்படும். தமிழில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்களைத் தகுதி மதிப்பெண்களாக மட்டுமல்லாமல், எவ்வளவு மதிப்பெண்கள் பெறுகிறார்களோ அதையும் சேர்த்து கொள்ளும் வாய்ப்பைத் தேர்வாணையம் செய்கிறது என்றார். அவருடன் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலீவர் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.