நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில் வேட்பாளர்கள் இறுதி செய்யும் பணியில் முக்கிய கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள் உட்பட மொத்தமாக 12838 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. திமுக அதிமுகவை தவிர பாமக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தேமுதிக, மக்கள் நீதி மையம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிட உள்ளது. அனைத்து கட்சிகளும் வேட்பாளர்கள் இறுதி செய்யும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். திமுக அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையில் குழு அமைத்து வேட்பாளர்கள் இறுதி செய்யும் பணியை மேற்கொண்டுள்ளது. மேலும் தேர்தல் பணிகள் தொடர்பாக முதலமைச்சர் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
எதிர்க்கட்சியான அதிமுக வேட்பாளர்கள் தேர்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சரும் அதிமுக வேதாரணியம் சட்டமன்ற உறுப்பினரான ஓ.எஸ். மணியன் நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் ஒரு இடத்தில் கூட அதிமுகவை பாஜக கேட்கவில்லை இதனால் அனைத்து வார்டுகளிலும் அதிமுக நேரடியாக போட்டியிடும் என்றும் தெரிவித்தார்.
மேலும் அதிமுகவை விமர்சித்து பேசிய பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு கண்டனம் தெரிவித்த ஓஎஸ்.மணியன் நாகரீகமான அரசியல்வாதி பேசக்கூடிய பேச்சு இல்லை எனவும் தெரிவித்தார். மேலும் ஏழை எளிய மக்களுக்கு வீடு வழங்கும் அத்திட்டத்தை திமுக அரசு எதுவும் செய்யாமல் கிடப்பில் போட்டது ஏழை மக்களை வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது என்பது என் கருத்து தேர்தல் அறிக்கையை குறிப்பிட்டதுபோல் 4 லட்சம் வழங்கி உடனடியாக வீடு கட்டும் திட்டத்தை கையில் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை அரசே பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியாத சூழல் உள்ளபோது குடிசையில் வாழும் விவசாயிகள் அந்த நெல்லை எப்படி பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியும் என கேள்வி எழுப்பிய ஓ.எஸ்.மணியன் உடனடியாக ஆன்லைன் முறையை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.