வேளாங்கண்ணியில் இரவில் பழுதாகி சாலையோரம் நின்ற அரசு பேருந்தால் கிராம புற கூலி தொழிலாளர்கள், பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
நாகை மாவட்டம் ஒருபுறம் கடலாலும் மறுபுறம் விவசாய நிலங்களாலும் சூழப்பட்டு இடைப்பட்ட பகுதியில் மக்கள் வசிக்கும் இடங்களாக உள்ளன. இந்த மாவட்டத்தில் மீன்பிடித் தொழில் மற்றும் விவசாயம் சார்ந்து கிராமப்புறங்கள் அதிகம் நிறைந்த மாவட்டத்தில் பெரும்பாலும் விவசாயமும் விவசாயம் சார்ந்த கூலி தொழிலாளர்களும் பெரும் அளவு உள்ளனர். விவசாயக் கூலிய தொழிலாளர்கள் விவசாயப் பணி இல்லாத போது மீன்பிடி துறைமுகத்திற்கு சுமை தூக்குபவர்களாகவும், தட்டு வண்டி ஓட்டுபவர்களாகவும், மீன் வெட்டும் தொழிலாளர்களாகவும், டீசல் மற்றும் ஐஸ் படகிற்கு ஏற்றும் தொழிலாளர்களாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.
இதை போல் கட்டிட வேலைக்கும் கூலி வேலைக்கும் பல்வேறு நகர்புறங்களுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் திருக்குவளையில் இருந்து நாகைக்கும், நாகையிலிருந்து திருக்குவளைக்கும் வேளாங்கண்ணி, திருப்பூண்டி, மே லப்பிடாகை, வழியாக எட்டுக்குடி வரை செல்லும் அரசு பேருந்தை கிராமப்புற விவசாயிகள் கூலித் தொழிலாளர்கள் ஆயிரம் கணக்கானோர் தினந்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். இது அரசு பேருந்தில் மகளிருக்கான இலவச பயண வசதியுடன் கூடிய நகர பேருந்து ஆகும். இதில் பல்வேறு கிராமங்களில் இருந்து கட்டிட வேலைக்கும் கூலி வேலை என பல்வேறு வேலைகளுக்கு நகர் புறத்திற்கு தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நாகை உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு வேலைக்குச் செல்லும் ஏராளமான பயணிகள் தினசரி பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு பேருந்தில்திடீரென ஏற்பட்ட பழுது காரணமாக பேருந்தில் பயணம் செய்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். வேளாங்கண்ணி மாதா குளம் அருகே பேருந்து வந்தபோது திடிரென பழுதாகி நின்ற நிலையில், ஓட்டுநர் பலமுறை முயற்சித்தும் பேருந்தை மீண்டும் இயக்க முடியவில்லை.இதனால் நாகைக்கு வேலைக்கு சென்று வீடு திரும்பிய பலரும் சுமார் 1 மணி நேரம் சாலை ஓரத்திலேயே காத்திருந்தனர். பின்னர் மாற்று பேருந்து வரவழைக்கப்பட்டு அதில் பயணிகள் அனைவரும் அனுப்பி வைக்கப்பட்டனர். இரவு நேர்த்தில் அரசு பேருந்து பழுதுதடைந்து சாலை ஓரத்தில் நின்றதால் கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வேலைக்கு சென்று வீடு திரும்பும் கூலித்தொழிலாளிகள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். அரசு பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும், தரமான பேருந்துகளை இயக்க என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்