கடல் சீற்றம் காரணமாக நாகை மீனவர் பைபர் படகில் இருந்து கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார். அருகில் இருந்த மீனவர்கள் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதுதொடர்பாக நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 


மீன்பிடி தடைக்காலம் 61 நாட்கள் அமலில் உள்ள நிலையில் ஆழ் கடலுக்கு செல்லும் விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரையும் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை கரைப்பகுதியில் சென்று சிறு தொழில் செய்யும் பைபர் படகு மீனவர்களுக்கு பொருந்தாது என்பதால் தடைக்காலத்திலும் கடலில் குறைந்த தூரமே சென்று கரை பகுதியில் மீன் பிடித்து வருகின்றனர். வங்க கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் காரணமாக  பைபர் படகு மீனவர்களும் கடலுக்கு செல்லக்கூடாது என வானிலை மையமும் மீன்வளத் துறையும் எச்சரிக்கை விடுத்து இருந்த நிலையில் பைபர் படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் இருந்தனர்.



 

புயல் வங்கதேசம் மியான் மார்க் பகுதிக்கு சென்றுள்ளதால் நாகை மாவட்ட பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு செல்லலாம் என மீன்வளத்துறை அறிவித்ததை அடுத்து பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க வழக்கம் போல சென்றனர். இந்த நிலையில் நாகை அடுத்த அக்கரைப்பேட்டை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வமணி 56. இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், சீதா மற்றும் லட்சுமி என்ற இரு மகள்களும் உள்ளனர். செல்வமணி இன்று அதிகாலை 4 மணிக்கு அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வழக்கம் போல் கடலுக்கு மீன் பிடிக்க தனது பைபர் படகில் சென்றுள்ளார். துறைமுகத்தில் இரண்டு நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகிலிருந்து நிலைதடுமாறு கடலில் விழுந்துள்ளார். இதில் அவர் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த நிலையில் மீன்பிடித்து விட்டு கரை திரும்பிய சக மீனவர்கள் செல்லும் வழியில்  படகு மட்டும் தனியாக நிற்பதை  பார்த்து அருகில் தேடி உள்ளனர். அப்போது உயிரிழந்த நிலையில் செல்வமணி கடலில் மிதந்துள்ளார். இதனை எடுத்து அவரது உடலை மீட்க சக மீனவர்கள் அக்கரைப்பேட்டை மீன் பிடித்து துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக கொண்டுவரப்பட்டது. மீனவர் செல்வமணி உயிரிழந்தது குறித்து நாகப்பட்டினம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மீனவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண