கும்பகோணம் கவி பாரதி நகரைச் சேர்ந்தவர் பாலகுரு. ஆசிரியராக உள்ளார். இவரது மகன் பாலாஜி (38). இவர் கத்தார் நாட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தலைமை ஐடி என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். மேலும் பாலாஜி தனது மனைவி சுந்தரி, மகள் ரிஷிவந்திகா, மகன் ரக்சன் (10) ஆகியோருடன் கத்தார் நாட்டில் வசிக்கிறார். பாலாஜி கடந்த 8 ஆம் தேதி வார விடுமுறை என்பதார், கத்தார் நாட்டில் உள்ள கடற்கரைக்குச் சென்று விடுமுறையை தனது குடும்பத்தினருடன் கழித்துள்ளார். இவர்கள் விடுமுறை நாட்களில் கடற்கரைக்கு சென்று வருவது வழக்கமாக வைத்துள்ளனர்.




பாலாஜி, வழக்கம் போல், கத்தார் நாட்டிலுள்ள கடற்கரைக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். அப்பொழுது கடலில், அலை அதிகமாக இருந்தது. இதனையறியாத  வெளிநாட்டு ஒரு பெண், கடலுக்குள் சென்றார். அப்போது அலை அதிகமாக இருந்ததால், அப்பெண், தன்னை காப்பாற்றும் படி கூச்சலிட்டார். அப்போது, அனைவரும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த நிலையில், ஒரு பெண், கடலில் முழ்கி இறக்கும் நிலையில் தத்தளிப்பதை அறிந்த, பாலாஜி, அவரை காப்பாற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன், கடலுக்குள் சென்றார். அப்போது அலை வேகத்தில், பாலாஜியை கடலில் முழ்கினார், கடலுக்குள் சென்ற தந்தையை காணாததை கண்டு, என்ன நடக்குமா என்று அறியாத மகன் ரஷ்னும் கடலுக்குள் சென்றான். மகனையும் கடல் அலை இழுத்து சென்றது. பின்னர் தந்தையும், மகனும் வெளியில் வரமுடியாமல், கடல் அலையின் சுழலில் சிக்கி, வெளியில் வரமுடியாமல் இறந்தனர். 




கடல் கரையின் வேறு ஒரு பகுதியில், பொருட்களை வாங்கி கொண்டிருந்த பாலாஜியின் மனைவி சுந்தரியும், மகள் ரிஷிவந்திகாவும், கடலில் காப்பாற்ற சென்ற இருவர் இறந்து விட்டனர் என்று அருகில் இருப்பவர்கள் தெரிவித்ததையடுத்து, என்ன நடக்கிறது என்று அறியாமல் கடல் கரையிலிருந்து பார்த்து கொண்டிருந்த, தாயும், மகளும்,  தனது கணவரும், மகனும் கடல் அலை சூழலில் சிக்கி உயிர் இழந்ததை அறிந்து கதறி அழுதார். 




இதனை அறிந்த அருகில் உள்ளவர்கள், கத்தார் நாட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் போலீசார், பாலாஜி பணியாற்றிய நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துனர். தொடர்ந்து காலை, தந்தை மகன் ஆகிய இருவரது உடலும் கும்பகோணம் கவிபாரதி நகருக்கு கொண்டு வரப்பட்டது.  கடல் அலை சூழலில் சிக்கி உயிருக்கு போராடிய பெண்ணை காப்பாற்ற வேண்டும் என தன் உயிரையும், தனது குடும்பத்தையும் பார்க்காமல், துணிச்சலுடன் சென்று பலியான தந்தை மகனின் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.  கும்பகோணத்தைச் சேர்ந்த தந்தை- மகன் ஒரே நேரத்தில் வெளிநாட்டில்  கடலில் மூழ்கி இறந்த சம்பவத்தால் கும்பகோணம் மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.