தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஒன்றியம், அரியதிடல் ஊராட்சியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகின்றது. இப்பகுதியிலுள்ள ஊராட்சியை சேர்ந்த சுமார் 25 க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் படித்து வருகின்றனர். கும்பகோணம் அருகே அண்ணலக்ரஹாரம் ஊராட்சி அரியதிடல் கிராமத்தில் உள்ள குழந்தைகள் அங்கன்வாடி மையத்தில் மாத்தி கீழத் தெருவை சேர்ந்த மீனாட்சி என்ற பெண் சமையலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் காலை அங்கன்வாடிக்கு சமையல் வேலைக்கு வந்த மீனாட்சி மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. மதுபோதை தலைக்கு ஏறியதால் மீனாட்சி நடக்கமுடியாமல் தள்ளாடியபடி அங்கன்வாடி மையம் முன்பு, தலையை கவிழ்த்த படி, தள்ளாடிய நிலையில் அமர்ந்துள்ளார்.
இதனைபார்த்த அங்கு பணியாற்றும் பணியாளர், உங்களை எந்த அதிகாரி வேலைக்கு அனுப்பியது, இப்போ எதுக்குங்க வந்தீர்கள், சமைக்க வந்தீர்களா? அலுவலகத்திற்கு சென்று நான் வேலை சரியாகத்தான் பார்க்கிறேன் பணியாளர் தான் சரி இல்லைன்னா புகார் செய்தீர்கள், இப்போது உங்கள் உடலுக்கு என்ன செய்கிறது, உங்களை அழைத்துச் செல்ல உங்கள் கணவர் வருவாரா? என அடுக்கடுக்காக பல கேள்வி கேட்டார். ஆனால் அதற்கு எதுவும் பதில் சொல்ல முடியாத அளவிற்கு நிதானமின்றி தலையை ஆட்டியபடி மது போதையில் தனது சேலை விலகுவது கூட தெரியாமலும், செல்போன் அழைப்பை எடுக்க முடியாத அளவிற்கு போதை அமர்ந்திருந்தார். போதையில் உளறி கொண்டிருந்ததால், இதனை அறிந்து அப்பகுதியில் உள்ளவர்கள் திரண்டனர்.
இது குறித்து தகவலறிந்து அங்கன்வாடி மேற்பார்வையாளர்களான ஜெயந்தி மற்றும் தமிழ்ச்செல்வி ஆகியோர், அங்கன்வாடி மையத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கிருந்த குழந்தைகளின் பெற்றோர் மீனாட்சி மீது புகார் தெரிவிக்கவே, மேலதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்படும் மேலும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கன்வாடி மையம் வாசலில் முன்பு மது போதையில் பிளாட்டாகி படுத்துவிட்டார். இவர் ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் 12 ஆம் தேதி இதே போல் மது போதையில் அங்கன்வாடிக்கு சமையல் பணிக்கு வந்ததாகவும், அதனை அறிந்த அதிகாரிகள் அங்கன்வாடிக்கு வந்து அவரை எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து குழந்தைகளின் பெற்றோர் கூறுகையில், கடந்த ஒரு மாத காலமாக அவர் பணிக்கு வரவில்லை. இந்நிலையில் காலை மீண்டும் குடித்துவிட்டு 9 மணிக்கு வரவேண்டிய பணிக்கு 11 மணிக்கு மீனாட்சி வந்துள்ளதாகவும், இதுபோன்ற பணியாளர்களை பார்த்து தங்கள் குழந்தைகள்கெட்டு விடும் மேலும் அவர் குடித்து விட்டு நிதானமின்றி சமைக்கும் உணவில் விபரீதம் ஏற்பட்டால், அதனை சாப்பிடும் குழந்தைகளின் நிலை கேள்வி குறியாகும். எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.