தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறையைச் சார்ந்த இந்தியப் பெருங்கடல் ஆய்வு மையம் சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்தியாவும், இந்தியப் பெருங்கடல் பாரம்பரியமும் என்கிற 3 நாள் கருத்தரங்கத் தொடக்க விழாவில் பங்கேற்று அவர் பேசியதாவது: பழங்காலத்தில் கிழக்கு மற்றும் மேற்கத்திய நாடுகளுடன் தமிழ்நாடு நீண்ட காலமாக விரிவான கடல் வர்த்தக வலையமைப்பைக் கொண்டிருந்தது. அக்காலத்தில் பிற நாடுகளுடன் தமிழகம் மிகப் பெரும் கடல்சார் வர்த்தகம் மேற்கொண்டதற்கு ஆதாரமாக இத்தாலி, ஐரோப்பிய நாடுகள், சீனா, ஆப்பிரிக்கா, அரேபிய தீபகற்பம், இலங்கை, தென்கிழக்கு ஆசிய நாடுகள், தொலை கிழக்கு நாடுகளிலிருந்து கண்டறியப்பட்ட நாணயங்கள், வளையங்கள், கண்ணாடி பொருள்கள், மண்பாண்டங்கள் உள்ளிட்டவை உள்ளன. தமிழ்நாட்டுடன் கடல்சார் வணிகத் தொடர்புடைய நாடுகளில் நம் நாட்டின் மண்பாண்டங்கள், கல்வெட்டுகள், மணிகள், சிலைகள் மற்றும் இதர பொருள்கள் காணப்படுகின்றன. இலங்கை, தாய்லாந்து, எகிப்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட முற்கால பானை ஓடுகளில் காணப்படும் தமிழ் பிராமி எழுத்துகள் மூலம் தமிழகத்தின் பழங்கால கடல்சார் நடவடிக்கைகளை அறிய முடிகிறது.
கடல்சார் வணிகம் வாயிலாக பழங்காலத்தில் தமிழர்களின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது - தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர்
என்.நாகராஜன் | 15 Oct 2022 04:28 PM (IST)
தஞ்சாவூர்: பழங்காலத்தில் கடல்சார் வணிகம் மூலம் தமிழர்களின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது என்று இந்திய தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் டி. தயாளன் தெரிவித்தார்.
தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் டி. தயாளன்
Published at: 15 Oct 2022 04:28 PM (IST)