இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட4-இல் இருந்து 6 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, சிவகங்கை, புதுக்கோட்டை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும். இதனால், பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




மேலும், ‘வங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. இதனால், இன்று முதல் வரும் 7ம் தேதி வரை சில மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வானம் தெளிவாக காணப்படும்’ என்றும் கூறப்பட்டுள்ளது.