நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் வினோத் இயக்கும் திரைப்படம் வலிமை.போனிகபூர், அஜித் பிறந்தநாளான மே 1ம் தேதி பர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என தெரிவித்திருந்தார்.வலிமை நடத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சிகள் ஸ்பெயின் நாட்டில் படமாக்கபட உள்ளதாகவும், அதற்காக அந்நாட்டு அனுமதிக்கு படக்குழு விண்ணப்பித்துள்ளது.




இன்னும் ஸ்பெயின் நாட்டு அனுமதி கிடைக்காததால் படக்குழு காத்திருப்பதாக கூறியுள்ள படத்தின் வில்லன் நடிகர் கார்த்திகேயா, அனுமதி கிடைத்ததும் 3 நாட்களில் அப்பணிகள் நிறைவுபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் , படம் ஆகஸ்ட் மாதம் வெளிவர வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று தெரியவந்துள்ளது . ஆர்எக்ஸ் 100 புகழ், கார்த்திகேயா கும்மகொண்டா, படத்தில் வில்லன்  கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்தது , இது ஸ்ட்ரீட்  பைக்கிங்கின் பின்னணியில் அமைக்கப்பட்ட ஒரு காவல்துறை சார்ந்த படம். சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் ஒரு ஸ்ட்ரீட்  பைக்கரின் கதாபாத்திரத்தில்  கார்த்திகேயா நடிக்கிறார் , அதேசமயம் அவரைப் பிடிப்பதற்கும் குற்றங்களை ஒழிப்பதற்கும் தலா அஜித் ஒரு போலீஸ்காரராக வளம் வருவார் என்று கூறப்படுகிறது . 




தல அஜித்தின் பைக் சாகசங்களைப் பற்றி அனைவரும் மிக நன்றாகவே தெரியும் இந்நிலையில் படத்தில் பல பைக் சேஸ் காட்சிகள் உள்ளன, அவை மிகப்பெரிய அளவில் படமாக்கப்பட்டுள்ளது , இந்த சண்டை காட்சிகள் பெரும் அளவில் இந்தியா சினிமாவில் பேசப்படும் , இந்த படத்தில் வரும் சண்டை காட்சிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்  முக்கியமாக அஜித்  ரசிகர்களுக்கு இது ஒரு "விசுவல் ட்ரீட் " ஆக அமையும் என்று என்று இயக்குனர் கூறியுள்ளார். 




" படத்தில் வரும் சண்டை காட்சிகள் அனைத்தும் உண்மையாகவே  தல அஜித் செய்த சாகசங்கள் எந்த VFX ம் பயன்படுத்தவில்லை இதனாலே வழக்கத்தைவிட படப்பிடிப்பின் நாட்கள் மிக தாமதமாக ஆனது மற்றும் க்ரீன் மேட்டில் எடுக்கலாம் என்று சில காட்சிகளை என்று முடிவு செய்து பின்னர் தத்துரூபமாக இருக்க வேண்டும் எந்த விதமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தாமல் இடம்பெற வேண்டும் என்று கடினமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் " என்று படக்குழுவினர் கூறினார் 


படத்தின் முதல் லுக் மே 1 தல பிறந்தநாள் அன்று வெளியாகும் படம் மிக விரைவில் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது . இது அஜித் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக இருக்கும் .