தெலுங்கானா ஆளுநராக பொறுப்பு வகிப்பவர் தமிழிசை சவுந்திரராஜன். இவரது பெயர் விருகம்பாக்கம் வாக்காளர் பட்டியலில் உள்ளது. இந்த நிலையில், இன்று தமிழகம் முழுவதும் காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது.




இதையடுத்து, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு விமானம் மூலம் சென்னை வந்திருந்தார். பின்னர், இன்று காலை தனது கணவர் சவுந்திரராஜனுடன் இணைந்து விருகம்பாக்கம் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு நேரில் சென்றார். பின்னர், அங்கு பொதுமக்களுடன் வரிசையில் காத்திருந்து, உரிய ஆவணங்களை சமர்ப்பித்து வாக்களித்தார்.



தெலுங்கானா ஆளுநரான தமிழிசை சவுந்திரராஜன் வாக்களிக்க வந்ததை முன்னிட்டு, அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. தமிழிசை சவுந்திரராஜன் தற்போது பாண்டிச்சேரி ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.