• தமிழகம் முழுவதும் சட்டசபை தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 7 மணியுடன் நிறைவு. தமிழகத்தில் 88,937 வாக்குச்சாவடிகளில் நாளை காலை வாக்குப்பதிவு தொடக்கம்.

  • வாக்குப்பதிவிற்காக 1.58 லட்சம் போலீசார் பாதுகாப்பு. சென்னையில் மட்டும் 30 ஆயிரம் போலீசார் பாதுாப்பு.

  • சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் 22 இந்திய வீரர்கள் வீரமரணம்.

  • புதுச்சேரியில் 30 சட்டசபை  தேர்தலுக்காக பரப்புரை ஓய்ந்த நிலையில், 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது.

  • அசாம் மாநிலத்தில் 40 தொகுதிகளுக்கான இறுதிகட்ட பரப்புரை நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், நாளை இறுதிகட்ட வாக்குப்பதிவு.

  • முதியோர், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்து வாக்குச்சாவடி மையம் செல்ல வாக்குப்பதிவு செய்ய இலவச வாகன சேவை வழங்கப்படும் – தமிழக தேர்தல் ஆணையம்.

  • பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் – சென்னை காவல் ஆணையர் உறுதி.

  • தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம்.

  • முன்னாள் முதல்வர் ரங்கசாமி தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் மாயம் –காவல்துறை விசாரணை.

  • கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கர்நாடகாவில் ஏப்ரல் 7 முதல் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி.

  • இந்தியாவில் ஒரே நாளில் 93,249 நபர்களுக்கு கொரோனா உறுதி. மகாராஷ்ட்ராவில் மட்டும் 49,447 நபர்களுக்கு கொரோனா உறுதி.

  • இந்தியாவில் இதுவரை 7.59 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

  • கொரோனா பரவலை கட்டுப்படுத்த மகாராஷ்ட்ராவில் மீண்டும் ஊரடங்கு. திங்கட்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 24 மணி நேர ஊரடங்கு.