தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துவருவதால், அதனை தடுப்பதற்காக முதல்வர் பழனிசாமி தலைமையில் மருத்துவ வல்லுநர் குழுவுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் பல்வேறு உத்தவுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.




கொரோனாவை தடுக்க நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். இதனை மீறுபவர்களுக்கு அபராதம்  விதிக்கப்பட வேண்டும். அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவேண்டும். நிறுவனங்கள் அரசு அறிவிக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்” என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.