மாநிலத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் கடந்த வியாழக்கிழமை முதல் (ஏப்ரல் 1) 24 சுங்கச் சாவடிகளில் வாகன பயனாளர்கள் கட்டணம் 3 முதல் 5 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து வகை வாகனங்களுக்கு 5 முதல் 15 ரூபாய் வரை கட்டணம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து பேசிய சென்னை பிராந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி திரு. பவன் குமார் 'ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆண்டுதோறும் கட்டண உயர்வு நடைமுறைக்கு வருவது இயல்பான ஒன்று தான் என்று கூறியுள்ளார்.
வாகன ஓட்டிகள் இந்த விலையேற்றத்திற்கு பெரும் அதிருப்தி தெரிவித்துவரும் நிலையில் பாஸ்ட் டேக் பயன்படுத்துவோர் குறைந்தபட்சம் 200 முதல் 250 ரூபாய் வரை கணக்கில் இருப்புவைத்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 48 சுங்கச்சாவடிகளில் 24இடங்களில் கட்டணம் அதிகரிப்பு அமலில் வந்துள்ளது.
கட்டணம் அதிகரிக்கப்பட 24 சுங்கச்சாவடிகள் :
ஆத்தூர்
நல்லூர்
பரனூர்
சூரப்பட்டு
வானகரம்
வாணியம்பாடி
கிருஷ்ணகிரி
லம்பளக்குடி
லட்சுமணம்பட்டி
போகலூர்
நாங்குநேரி
பூதக்குடி
பழைய
பள்ளிகொண்ட
சிதம்பட்டி
பட்டறைபெரும்புதூர்
புதுக்கோட்டை
எஸ் வி புதூர்
சாலைப்புதூர்
ஷெண்பகம்பேட்டை
எட்டுர்வட்டம்
திருப்பாச்சேத்தி
கணியூர்
கப்பலூர்
48 சுங்கச்சாவடிகளில் 22 சுங்கச்சாவடிகளில் வரும் நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் புதிய கட்டணம் அமலுக்கு வரும். மீதமுள்ள நெமிலி மற்றும் சென்னசமுத்திரம் சுங்கச்சாவடிகளில் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் ஆணைக்கு இணங்க பயனர் கட்டணத்தில் 50 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்படும் என்று பவன் குமார் கூறினார்.