மன்னார்குடியில் மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம்

கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக மன்னார்குடியில் போலீசார் தீவிர கண்காணிப்பு செய்து மாஸ்க் அணியாதர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

Continues below advertisement

கொரோனா தீவிரமடைந்து வரும் நிலையில் பொதுமக்களுக்கு அரசு சில விதிகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. ஆனாலும் அதை சிலர் முறையாக பின்பற்றாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். அவ்வாறு பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.  திருவாரூர் மாவட்டம் முழுவதும் இன்று இதுவரை 113 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 13 ஆயிரத்து 29 பேர் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  343 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Continues below advertisement



ஆனால் நிலை உணராமல் பலர் வலம் வருவதை தடுக்க திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி போலீசார் நகரின்
அனைத்து பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு செய்து வருகின்றனர். முகக்கவசம் அணியாதவர்களுக்கு 
அபராதம் விதித்து வருகின்றனர். தனியார் மற்றும் அரசு பேருந்துகளிலும் விதிகள் பின்பற்றப்படுகிறதா என ஆய்வு செய்து, அங்கு அபராதம் விதிக்கப்படுகிறது. போலீசாரின் இந்த நடவடிக்கையால் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola