தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார்.
இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், அப்பணிகளை பார்வையிடுவதற்காக தேனி எம்.பி.,யும் பன்னீர்செல்வத்தின் மூத்த மகனுமான ரவீந்திரநாத் தொகுதியில் வலம் வந்து கொண்டிருந்தார்.
பெருமாள்கவுண்டன்பட்டி அருகே அவரது கார் வந்த போது மறைந்திருந்த சிலர் ரவீந்திரநாத் கார் உள்ளிட்ட உடன் வந்த கார்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ரவீந்திரநாத் கார் உள்ளிட்ட 3 கார்களின் கண்ணாடிகள் சேதமடைந்தது.
அதிர்ஷ்டவசமாக ரவீந்திரநாத் காரில் இல்லாததால் அவருக்கு காயம் ஏற்படவில்லை. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள் என ரவீந்திரநாத் தரப்பில் போலீசாரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.