தமிழகத்தில் கூடுதல் நீட் தேர்வு மையங்கள் அமைக்க வலியுறுத்தி ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், ஒரு மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வு எழுத மற்றொரு மாநிலத்திற்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறிய உயர்நீதிமன்றம், அந்தந்த மாநிலங்களில் கூடுதல் நீட் தேர்வு மையங்களை உருவாக்க வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டுள்ளது. மையங்களை காரணம் காட்டி மாணவர்களை அலைகழிக்க கூடாது என்றும் அந்ததந்த மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள், அங்கேயே தேர்வு எழுதும் படி கூடுதல் தேர்வு மையங்களை அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
அந்தந்த மாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள்; உயர்நீதிமன்றம் உத்தரவு
பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன் | 23 Mar 2021 01:19 PM (IST)
அந்தந்த மாநிலங்களில் கூடுதல் நீட் தேர்வு மையங்கள் அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
neet_exam