மு.க.ஸ்டாலின் மருமகனும், ஐ-பேக் மாநில துணை செயலாளர் சபரீசன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து திமுக சார்பில் நீலாங்கரையில் உள்ள மு.க ஸ்டாலினின் மருமகன் வீட்டில் பணம் பதுக்கிவைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.




திமுக சார்பில் ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் பணம் பட்டுவாடா நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 




திமுகவின் ஐ-பேக் பிரிவின் மாநில துணைச் செயலாளர் கார்த்திக் மோகன், ஜு ஸ்கோயர் நிறுவனத்தின் பங்குதாரர் பாலா ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்கள். ஆகவே நீலாங்கரையில் உள்ள ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீடு, சென்னை அண்ணா நகரில் உள்ள கார்த்திக் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. நீலாங்கரையில் சபரீசன் வீட்டின் முன்பு போலீசார், பத்திரிகையாளர்கள், திமுகவினர் என ஏராளமானோர் குவிந்துள்ளதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. 




தொடர்ந்து அதிமுக, திமுக முக்கிய பிரமுகர்கள் வீடுகளிலும் அவருடைய உறவினர் வீடுகளிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவது தேர்தல் நேரத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்றே சொல்லலாம்.