திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பாம்பார்புரம் பிரதான சாலையில்  பழமை வாய்ந்த மரம் ஒன்றி சற்று முன் சாய்ந்தது.




சாலையில் குறுக்கே விழுந்த மரத்தால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மீட்பு படையினர் வந்து மரத்தை அகற்றுவதற்கான பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளதால் அதை ஒழுங்கும் படுத்தும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர்.