"இரட்டை இலை சின்னமும் தாமரை சின்னமும் வேறுவேறல்ல, கோட்டையில் ஜெயலலிதா ஆட்சியும், எடப்பாடி பழனிச்சாமி  ஆட்யும் அமைய வேண்டும் என்றால் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்" என நடிகை கெளதமி பரப்புரையில் பேசியுள்ளார்.

 

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்யிடும் வேட்பாளர் குப்புராமுவை ஆதரித்து வாலாந்தரவை பகுதியில் நடிகை கெளதமி பரப்புரை மேற்கொண்டர். அப்போது பேசிய அவர், “வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி அன்று தேர்தல் நாளில், பொதுமக்கள் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்க வேண்டும். நல்லவர்கள் பொறுப்புக்கு வந்தால்போதும் என்று நினைத்து வீட்டிலேயே உட்கார்ந்திருந்தால் எதுவும் நடக்காது.


நல்லவர்கள் கையை கட்டிக்கொண்டு வீட்டில் உட்கார்ந்தால் எதுவும் நடக்காது. அவ்வாறு செய்வது நமக்கு எதிரான கெடுதலான விஷயத்திற்கு வாய்ப்பு கொடுப்பதுபோல ஆகிவிடும். தயவுசெய்து பொதுமக்கள் வாக்களிக்காமல் மட்டும் இருந்து விடாதீர்கள். உங்களில் பல பேர் ஏற்கனவே இரட்டை இலைக்கு வாக்கு இருப்பீர்கள். ஆனால் இந்தமுறை இரட்டை இலையும் தாமரையும் வேறுவேறல்ல. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறோம்.

 

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து அனுப்பினால் தான் தமிழகத்திற்கு தேவையான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற முடியும்” எனக்கூறி வாக்குச் சேகரித்தார்.