நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்கு உட்பட்ட மசினகுடி பகுதியில் ஆண் காட்டு யானை ஒன்றுக்கு காலில் காயம் ஏற்பட்டது.  அதனால் சரிவர நடக்க முடியாமல் அவதிப்படுவதாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் யானைக்கு சிகிச்சை தர வனத்துறை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் வன உயிரின ஆர்வலர்களின் குற்றச்சாட்டுக்கு வனத் துறை தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

 


யானைக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி: வனத்துறை வினோத விளக்கம்

குறிப்பிட்ட கூட்டத்தில் உள்ள அந்த ஆண் யானை கடந்த 4 - 5 ஆண்டுகளாக தூக்கத்தில் முதுமலை வன பகுதிக்கு இடம்பெயர்ந்து வருவதாகவும், மே அல்லது ஜூன் மாதங்களில் முதுமலை பகுதியை விட்டு வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்து சென்று விடுவதாகவும், அன்று முதலே அதனால் சரிவர நடக்க முடிவில்லை என்பதை வனத்துறை அறிந்ததாகவும், இதைத் தொடர்ந்து யானையை அருகில் சென்று ஆய்வு செய்ததில் அதற்கு புதிதாக காயங்கள் ஏதும் இல்லை என்றும் விளக்கம் தெரிவித்துள்ள வனத்துறை,  பிறவிக் குறைபாடு காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளது. இருப்பினும் அந்த யானை பல்வேறு இடங்களில் சுற்றி வருவதால் அதன் காரணமாக யானைக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்றும் வனத்துறை தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.