நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, பல்வேறு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பகல் நேரத்திலும் மக்கள் கூடுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியும் நாடு முழுவதும் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாகப் பரவுகிறது

எல்லோரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்

முக கவசம் முக்கியம். தடுப்பூசி போட்டுக் கொள்வது அதை விட முக்கியம்.

தயக்கத்தை விட்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்
— P. Chidambaram (@PChidambaram_IN) April 8, 2021

இந்த நிலையில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில், “கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாகப் பரவுகிறது. எல்லோரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். முக கவசம் முக்கியம். தடுப்பூசி போட்டுக் கொள்வது அதை விட முக்கியம். தயக்கத்தை விட்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.