திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் சில வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் பெண்கள் அனைவரும் அரசு பேருந்தில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம் என்று தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள அரசு பேருந்துகளில் இந்த ஆணை உடனடியாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் அறிவிப்பை பயன்படுத்தும் வகையில் யூடியூப் இளைஞர் ஒருவர் பெண் வேடம் அணிந்து பயணித்துள்ளார். இந்த பயணம் தொடர்பாக அவரே தன்னுடைய யூடியூப் செனலில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதன்படி கன்னியாகுமாரி பகுதியைச் சேர்ந்த சர்ஜின் என்ற இளைஞர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் எப்படி பெண் போல் முகத்தில் மேக் அப் செய்து பின்னர் புடவை அணிந்து பேருந்தில் ஏறி இலவச பயணச் சீட்டு வாங்கும் வரை காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ பலரையும் ஆச்சரியம் அடைய வைத்துள்ளது.
அதன்பின்னர் அதே வீடியோவில் அவர், நான் பெண் இல்லை என்று கூறி மீண்டும் நடத்துனரிடம் இருந்து பணம் கொடுத்து பயணச்சீட்டை வாங்கியுள்ளார். அதன்பின்னர் பெண் வேடத்தில் புல்லட் பைக் ஓட்டும் காட்சிகள் மற்றும் சாலையில் நடனமாடும் காட்சிகள் என அனைத்தும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவை தற்போது பலரும் கண்டு பகிர்ந்து வருகின்றனர்.
இவை தவிர இவருடைய யூடியூப் சேனலில் வேறு சில சுவாரஸ்யமான வீடியோக்களும் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த வீடியோக்களும் தற்போது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.
மேலும் வைரல் வீடியோக்களைக் காண:
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: தில்வாலேபுச்டானேச்சா.... தாமரைச்செல்வியிடம் பல்பு வாங்கிய ப்ரியங்கா..!