கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக பிரசித்தி பெற்ற சிவாலயமான நடராஜர் கோயில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் அவ்வப்போது தொடர் சர்ச்சைகளும் பிரச்சினைகளும் எழுந்து வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்த சூழலில் சிதம்பரம்  நடராஜர் கோயிலின் மூலவரான நடராஜரை இழிவுபடுத்தியும், கொச்சைப்படுத்தியும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு You too brutus என்ற சேனல் பதிவிடப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து அந்த பதிவு யூ ட்யூப்பில் இருந்து நீக்கப்பட்டது.




Elon Musk: 'மசாஜ் செய்.. குதிரை தருகிறேன்' எலான் மீது பாலியல் புகார்! எலானுக்கு ஆதரவாக டெஸ்லா தலைவர்!


இந்நிலையில், சிதம்பரம் கோயில் நடராஜர் கடவுளை இழிவுபடுத்தி யூடியூப்பில் பதிவு செய்த யூ.டியூபர் மைனர் விஜய் என்பவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி சிதம்பரத்தில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் சார்பில் சிதம்பரம் போல்நாராயணன் தெருவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான சிவனடியார்கள் பங்கேற்றனர்.




Nithyananda Samadhi: ‛சமாதியில் இருந்து வரங்களை வழங்குவேன்...’ நடுராத்திரியில் பகீர் கிளப்பிய நித்யானந்தா!


திருக்கழுக்குன்றம் தாமோதரன் சுவாமிகள் உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட நிலையிலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் வந்தார். பின்னர் அவர் மேடைக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன்சம்பத், ராம ரவிக்குமார், ஞானகுருஜி,  உள்ளிட்ட ஏராளமான இந்து அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள், தொண்டர்கள், சிவனடியார்கள், பக்தர்கள் உள்ளிட்டோர் ஏராளமானோர் பங்கேற்றனர்.




Udhayanidhi Stalin: எனக்கு நீங்கதான் பெரியார், அண்ணா.. கட்சி விழாவுக்கு நான் வரணும்னா இதுதான் ரூல் - உதயநிதி பேச்சு   


அப்போது அவர்கள் நடராஜரை இழிவுபடுத்திய யூ ட்யூபரான மைனர் விஜயை கைது செய்ய வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை சிவலோக திருமடத்தின் மடாதிபதி தவத்திரு பாலகுரு அடிகள், கூறுகையில், சிவனடியார்கள் இன்றைக்கு நீதிக்காக வீதியில் இறங்கி போராட வேண்டிய கட்டாயத்தை இந்த அரசு ஏற்படுத்தி விட்டது. சிவபெருமானின் திருநடனத்தை புரிந்து கொள்ள முடியாத மைனர் விஜய் என்பவர் ஆபாசமாக காணொளி பதிவிட்டிருக்கிறார். அவர் மட்டுமல்ல. அவரைப் போன்ற எண்ணம் கொண்டவர்களுக்காகத்தான் இந்த போராட்டம். இங்கு நமக்கு நீதி கிடைக்கும். அதுவரை தொடர்ந்து போராடுவோம் இல்லையெனில் டில்லிக்கு சென்று கூட போராட தயாராக இருக்கிறோம் என்றார்.