சேலம் மாநகர் கோரிமேடு பகுதியில் உள்ள அரசு மகளிர் கலை கல்லூரியில் ஐம்பெரும் விழாவில் ஒரு பகுதியாக முத்தமிழ் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகள் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினர் இறையன்பு பைந்தமிழ் இலக்கியம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியது, "இலக்கியம் என்பது பொழுதுபோக்காக மட்டுமல்ல நம்மை வழி காட்டவும் உருவானது. பைந்தமிழ் இலக்கியங்களில் பின்னாட்களில் மேற்கத்திய தத்துவங்களில் கூறப்பட்ட அனைத்து தத்துவங்களும் கருத்துகளும் இடம் பெற்றுள்ளன. நட்பு, மேலாண்மை, தலைமை பண்பு, நவீன வேளாண்மை முறைகள், நீர் மேலாண்மை, சுய ஆய்வு என பின்னாட்களில் ஆராய்ச்சி செய்து கூறப்பட்டு. தற்போது பயன்பாட்டில் உள்ள அனைத்தும் பைந்தமிழ் இலக்கியங்களில் எளிமையாக ஆனால் ஆழமாகப் கூறப்பட்டுள்ளன.
திருக்குறள், சிலப்பதிகாரம், புறநானூறு, குறுந்தொகை, மணிமேகலை நெடுநல்வாடை, பொருணராற்றுப்படை என தமிழ் இலக்கிய நூல்களில் இருந்தும் பிளாட்டோ, அரிஸ்டாட்டில், ஷேக்ஸ்பியர், கார்ல் மார்க்ஸ் போன்ற அறிஞர்களின் சிந்தனைகளை ஒப்பிட்டு மாணவிகளுக்கு அரிய கருத்துக்களை முன் வைத்தார். மேலை நாடுகளில் கூறப்பட்டவை அனைத்தும் 2000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டவை என்றார். தமிழ் இலக்கியம் பயிலும் மாணவிகள் மட்டுமின்றி அனைத்து துறை மாணவிகளும் தமிழ் இலக்கியத்தை வேண்டி விரும்பி படிக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் புத்தகம் படிக்கும் பழக்கத்தை இளைஞர்கள் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு வலியுறுத்தினார்.
சிறப்புரையைத் தொடர்ந்து கல்லூரி மாணவிகளின் மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.