தஞ்சாவூரில், தஞ்சாவூர் வடக்கு, தெற்கு மத்திய மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், திமுகழக தேர்தலில் இரு அணியாகவும், பொதுத் தேர்தலில் ஒரே அணியாகவும் இருந்து பணியாற்றி வரும் திமுகவினர், விரைவில் நடைபெறவுள்ள நகர்புறத் தேர்தலில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடுடன், ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும். கடந்த பொதுத் தேர்தலில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 பேரவைத் தொகுதிகளில் 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளீர்கள், அதே போல் வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற வேண்டும். அந்த வெற்றியை முதல்வரின் காலடியில் சமர்பிக்க வேண்டும். இதற்காக திமுகவினர் அனைவரும் ஒத்துழைப்புடன் வெற்றிக்காக பாடுபட வேண்டும். வெற்றி ஒன்றே குறிக்கோளுடன் இருக்க வேண்டும். நமது நோக்கம் அனைத்தும் வரும் தேர்தலில் அனைத்து இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்றே இருக்க வேண்டும்.


Watch Video: கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென தீப்பற்றி எரிந்த காரால் பரபரப்பு..!



ராமநாதபுரம் அதிமுக மாவட்ட செயலாளர் தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு - மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உத்தரவு


எனக்கு இந்த மாவட்டத்தை கண்காணிக்க கூடிய கூடுதல் பொறுப்பை முதல்வர் வழங்கியுள்ளார், அதன்படி உங்களுடைய அன்பையும் ஆதரவையும், ஒத்துழைப்பையும் நீங்கள் எனக்கு தர வேண்டும். பழைய கணக்கு ஒன்று உள்ளது, நாடாளுமன்றத் தேர்தலில் தஞ்சாவூரில் அன்பிலார் நின்று தோல்வியடைந்தார். ஆனாலும் அவர் இங்குள்ள திமுககாரர்களிடம் பாசத்தை வாரி வழங்கி அவர்களிடம் வெற்றி பெற்றார். அதே போல் என்னையும் நீங்கள் அரவணைத்து பழைய கணக்கை தீர்க்க வேண்டும். திருச்சிகாரான அன்பிலார் தஞ்சாவூரில் தோல்வியடைந்தார், ஆனால் நாங்கள் தஞ்சாவூர்காரரான எல்.கணேசனை திருச்சியில் வெற்றி பெற வைத்தோம்.


தேர்தலுக்கு முன்பிருந்த முனைப்பும் ஊக்கமும்,  தொண்டர்களுக்கு எப்போதும் இருக்க வேண்டும். தொண்டர்களுக்கு உரிய நேரத்தில் உரிய மரியாதையும், அரசின் அதிகாரமும் தலைவர் விரைவில் வழங்குவார். எனவே, திமுகவினர் உணர்வுப்பூர்வமாக கட்சிப் பணியாற்ற வேண்டும். என்றார். கூட்டத்தில் எம்பிக்கள் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், செ.ராமலிங்கம், அரசு கொறடா கோவி.செழியன், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், சாக்கோட்டை க.அன்பழகன், அண்ணாதுரை, டிகேஜி.நீலமேகம், அசோக்குமார், மாவட்ட செயலாளர்கள் சு.கல்யாணசுந்தரம், ஏனாதி.பாலசுப்பிரமணின், முன்னாள் எம்எல்ஏ எம்.ராமச்சந்திரன், மூத்த நிர்வாகிகள் து.செல்வம், இறைவன், சு.ப.தமிழழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.


அரியர் தேர்வில் 80 சதவீத மாணவர்கள் தோல்வி - வேளாண் பல்கலை கழக மாணவர்கள் போராட்டம்..!