உலகம் தற்போது டிஜிட்டல் மயமாகி இருக்கிறது. ஸ்மார்ட் ஃபோனை கையில் வைத்திருந்தால் அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் நமது கைகளுக்குள் என்ற நிலை உருவாகியுள்ளது. 


ஏராளமான செயலிகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. மேலும், ஆன்லைன் பணப்பரிவர்த்தனை என்பது மிக மிக எளிதாகிவிட்டது. இதனால் சாப்பாடு வாங்குவதில் தொடங்கி டிடிஹெச் கட்டணம் செலுத்துவது என பல பரிவர்த்தனைகள் ஆன்லைனிலேயே நடக்கின்றன. 


சிலிண்டர் புக் செய்வது ஒரு காலத்தில் கடினம் என எண்ணப்பட்ட நிலையிலிருந்து ஆன்லைனில் சுலபமாக புக் செய்யும் நிலை வந்துவிட்டது. அதேபோல் மின்சார கட்டணமும் ஆன்லைனில் கட்டும் வசதி வந்திருக்கிறது. 


தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “கூகுள் பே மற்றும் பிற மொபைல் வாலட்கள் மூலமாகவும் உங்கள் ஃபோனைப் பயன்படுத்தியும் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தலாம்” என பதிவிட்டுள்ளார்.


 






முன்னதாக, மின்கட்டணத்தில் சிஜிஎஸ்டி மற்றும் எஸ்ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது.  பாலாஜி என்ற நுகர்வோர், "எனது பில் தொகை ரூ. 420 ஆனால் ஊழியர்கள் என்னிடம் ரூ. 521க்கான ரசீதைக் கொடுத்தனர். அதில் சிஜிஎஸ்டி மற்றும் எஸ்ஜிஎஸ்டி விகிதங்கள் ஒவ்வொன்றும் ரூ. 49.50 எனக் காட்டியது. இதற்கு ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளால் விளக்கம் அளிக்க முடியவில்லை” என தெரிவித்தார். மேலும், கணினி தரவுகளின் அடிப்படையில்  ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: ஒமிக்ரான் வைரஸ் - வருகிறதா ஊரடங்கு.... மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சொல்வது என்ன?


Venkat Prabhu | "மிஸ் யூ சிம்பு" "லவ் யூ அப்துல் காலிக்” - வெங்கட் பிரபு பதிவிட்ட எமோஷ்னல் போஸ்ட்


திமுகவினரை கைது செய்யுங்கள் - தமிழ்நாடு அரசுக்கு சீமான் வலியுறுத்தல்