முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்... எப்படி தெரியுமா ?

முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது விழுப்புரம் கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்

Continues below advertisement

விழுப்புரம் : முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

இது குறித்து அவர் கூறுகையில்,

ஆண்டுதோறும் பன்னாட்டு அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் விளையாட்டு வீரர்கள், 2 சிறந்த பயிற்றுநர்கள், 2 சிறந்த உடற்கல்வி, இயக்குநர்/உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது பரிசாக தலா ரூ.1.00 இலட்சம் வீதம். ரூ.10,000/- மதிப்பிலான தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரம் ஆகியவற்றை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை வழங்கி ஒவ்வொரு நிதியாண்டிலும் (ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 முடிய) வழங்கி வருகிறது. விருது ஆண்டுக்கு முந்தைய மூன்று ஆண்டுகள் விளையாட்டில் சாதனைகள் படைத்த விவரங்களைச் சமர்ப்பித்தல் வேண்டும்.

இது தவிர, விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துநர்/ஒரு நிர்வாகி/ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர் (ரூ.10.00 இலட்சத்திற்கும் அதிகமாக நன்கொடை அளித்தவர்) ஒரு ஆட்ட நடுவர்/ நடுவர்/நீதிபதி ஆகியோர்களுக்கு முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது ஒவ்வொரு நிதியாண்டிலும் (ஏப்ரல் 1 முதல் 31 முடிய) வழங்கப்படுகிறது. இவர்களுக்கு மேற்கண்ட விருதிற்கு ரூ.10,000/- க்கு மிகாமல் ஒரு தங்கப்பதக்கமும் ஒரு பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு விருது வழங்குவதற்கு முந்தைய இரண்டு வருட செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

இத்திட்டத்தின் படி, 2022-2023 ஆண்டிற்கான (காலம் 01.04.2019 ( 31.03.2022 வரை) 2023-2024 ஆண்டிற்கான (காலம் 01.04.2020 5 31.03.2023 ) முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள்/வீராங்கனைகள், பயிற்றுநர்கள், உடற்கல்வி இயக்குநர்/உடற்கல்வி ஆசிரியர்/விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் நடத்துநர்/ஒரு நிர்வாகி/ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர்/ஒரு ஆட்ட நடுவர்/நடுவர்/நீதிபதி ஆகியோரிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

குறிப்புரை:-

தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளாக வசித்து வரும் தமிழ்நாட்டிற்காக இரண்டு முறை தமிழ்நாடு அணியின் சார்பாகக் கலந்து கொண்டு இந்தியாவின் சார்பாக விளையாடியவர்கள் தகுதி பெறுவர். இந்தியாவின் சார்பாக கலந்து கொண்ட தமிழ்நாட்டில் பணியின் நிமித்தம் குறைந்தது 5 ஆண்டுகளாக வசித்து வரும் முப்படை, இரயில்வே, காவல், அஞ்சல் மற்றும் தொலை தொடர்புத்துறை மற்றும் இதர துறைகளில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி பெறுவர்

இரண்டாவது முறையாக ஒரு நபருக்கு இவ்விருது வழங்கப்பட மாட்டது. ஒருவர் காலமாகும் பட்சத்திலும் இவ்விருது வழங்கப்படும். விருதிற்கு முந்தைய 3 ஆண்டுகளில் விளையாட்டில் பெற்ற சிறந்த வெற்றிகளை இவ்விருதிற்காகக் கருத்தில் கொள்ளப்படும். விளையாட்டு வீரர்கள்/வீராங்கனைகள் தங்களது சான்றிதழ்களின் நகல்களை சான்றொப்பத்துடன் இணைத்தல் வேண்டும். உரிய விண்ணப்பத்தில் விண்ணப்பித்தல் வேண்டும் இவ்விருதிற்காக பரிந்துரை செய்யப்படுபவர்கள் மேற்காணும் விதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

விளையாட்டுப் போட்டிகளின் பட்டியல்கள்:-

ஒலிம்பிக் போட்டிகள், சர்வதேச ஒலிம்பிக் குழு அங்கீகாரத்துடன் சாவதேச விளையாட்டு, இணையத்தால் நடத்தப்படும் காமன்வெல்த் வாகையர் போட்டிகள் (4 ஆண்டுகளுக்கு ஒருமுறை. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மற்றும் ஆண்டுதோறும்). ஆசிய விளையாட்டு போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், சர்வதேச ஒலிம்பிக் குழு அங்கீகாரத்துடன் சர்வதேச விளையாட்டு இணையத்தால் நடத்தப்படும் உலக வாகையர் போட்டிகள் (4 ஆண்டுகளுக்கு ஒருமுறை, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மற்றும் ஆண்டுதோறும்),தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள், தேசிய விளையாட்டுப் போட்டிகள், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு இணையம் நடத்தும் தேசிய வாகையர் போட்டிகள், அழைப்புப் போட்டிகள் மற்றும் மண்டலங்களுக்கு இடையேயான போட்டிகள் கருத்தில் கொள்ளப்படாது.

முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள், விருது ஆண்டுக்கு முந்தைய மூன்று ஆண்டுகள் தமிழ்நாட்டில் வாழ்ந்து சாதனைகள் படைத்த தலை சிறந்த விளையாட்டு வீரர்கள் பன்னாட்டு அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுக்களில் பதக்கமும் அதாவது உலகக் கோப்பை, தெற்காசிய விளையாட்டு போட்டிகள், அங்கீகிர்கப்பட்ட சம்பந்தப்பட்ட விளையாட்டு இணையங்களினால் நடத்தப்படும் தேசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தனிநபர் போட்டிகளில் முதல் மூன்று இடங்களிலும் மற்றும் குழுப் போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடமும் பெற்றிருத்தல் வேண்டும். போட்டிகளில் பெற்ற வெற்றிகள் கருத்தில் கொள்ளப்படும்.

2022-2023 மற்றும் 2023-2024 ஆம் ஆண்டிற்கு முந்தைய மூன்று ஆண்டுகளான 01.04.2019 முதல் 31.03.2023 முடிய பெற்ற வெற்றிகள் கருத்தில் கொள்ளப்படும். தனிநபர் போட்டிகளில் முதல் மூன்று இடங்களிலும் மற்றும் குழுப் போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடமும் பெற்றிருத்தல் வேண்டும். தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளின் சாதனைகள் கருத்தில் கொள்ளப்படும்..

விருதுக்கு விண்ணப்பிக்கும் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள், தமிழ்நாடு விளையாட்டு கழகம்/மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்/முதன்மை கல்வி அலுவலர்/முதன்மை உடற்கல்வி ஆய்வர் (ஆடவர் / | மூலமாகவும், விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துநர்/ஒரு நிர்வாகி/ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர் (ரூ.10.00 இலட்சத்திற்கும் அதிகமாக நன்கொடை அளித்தவர்)/ஒரு ஆட்ட நடுவர்/நடுவர்/நீதிபதி ஆகியோர்கள் உரிய வழிமுறையாகவும் விண்ணப்பங்கள் உறுப்பினர் செயலர் அவர்களக்கு வந்து சேரும்படி அனுப்பவேண்டும்.

விண்ணப்பங்கள் அடங்கிய உறையின் மேல் "முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம்" என்று எழுதப்பட்டிருக்க வேண்டும். மேற்படி விருதுக்கான விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து 11.11.2024-க்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் விழுப்புரம் என்ற முவரிக்கு அனுப்பிவைத்தல் வேண்டும். மேற்கண்ட விருது தொடர்பாக இதர விபரங்களை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் நேரிலோ, அல்லது தொலைபேசியிலோ (7401703485) தொடர்புகொண்டு விபரம் பெற்றுக்கொள்ளலாம் என  தெரிவித்துள்ளார்

Continues below advertisement
Sponsored Links by Taboola