செப்டம்பர் 29-ஆம் தேதி சர்வதேச இருதய தினம் அனுசரிக்கப்படும். சர்வதேச இருதய தினத்தை ஒட்டி தருமபுரியில் செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு த் ஊர்வனத்தை எஸ்பி கலைச்செல்வன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

 

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உலக இருதய தினத்தை முன்னிட்டு தனியார் செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகள் சார்பில் பொதுமக்களுக்கு இதயத்தின் செயல்பாடு மற்றும் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.கலைச்செல்வன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 




இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்ட செவிலியர் கல்லூரி மாணவ மாணவிகள் இதயத்தின் செயல்பாடுகளையும், முக்கியத்துவத்தையும் பொதுமக்கள் புரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி கொண்டு ஊர்வலமாக சென்றனர். இதில் உடற்பயிற்சி செய்வோம், ஆரோக்கியமாக வாழ்வோம், தீய பழக்கங்களை தவிர்ப்போம், இதயத்தை காப்போம், பிறக்கும் முன் துடிக்க தொடங்கும் இதயத்தை, பாதுகாப்பாக வைத்துக் கொள்வோம், துரித உணவு தவிர்ப்போம், இதயத்தை காப்போம் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி கொண்டு ஊர்வலமாக சென்றனர். மேலும் மருத்துவக் கல்லூரியில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணி, சேலம் பிரதான சாலை வழியாக நெசவாளர் காலனி வரை நடைபெற்றது. இதனை தொடர்ந்து நெசவாளர் காலனியில் மாபெரும் இலவச இருதய பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

 

நல்லம்பள்ளி பகுதியில் திமுக முப்பெரும் விழாவை முன்னிட்டு இண்டூர், நத்தஅள்ளி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிளைகளில் திமுக கொடி ஏற்றும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

 

  தமிழக முதல்வரும் கழக தலைவருமான ஸ்டாலின்  ஆணைக்கிணங்க தருமபுரி மாவட்டம் முழுவதும் திமுக முப்பெரும் விழாவை முன்னிட்டு, திமுக கட்சி கொடியேற்று விழா அனைத்து பகுதிகள் மற்றும் கிராமங்களில் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து இன்று நல்லம்பள்ளி மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட  நத்தஅள்ளி, இண்டூர், முஸ்லிம் தெரு உள்ளிட்ட  10 க்கும் மேற்பட்ட கிளைகளில் கிழக்கு மாவட்ட பொருப்பாளர் தடங்கம் சுப்ரமணி தலைமையில் திமுக கட்சி கொடி ஏற்று விழா மேளதாளங்கள் முழங்க வெகு விமர்சையாக  நடைபெற்றது. தொடர்ந்து திமுக மாவட்ட பொருப்பாளர் தடங்கம் சுப்பிரமணி கட்சி கொடியை ஏற்றி வைத்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். 



மேலும் கட்சி குடியேற்ற வந்து திமுக மாவட்ட பொருப்பாளர் தடங்கம் சுப்பிரமணி உள்ளிட்ட திமுக நிர்வாகிகளுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர்கள் வைகுந்தம், ஏ.எஸ்.சண்முகம், நல்லம்பள்ளி ஒன்றிய குழு துணை தலைவர் பெரியண்ணன் மற்றும் திமுக கட்சியின் மாநில, மாவட்ட,  நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.