கரூர் மாவட்டம் புகழூரில் உள்ள தனியார் (ஈ.ஐ.டி பாரி) சர்க்கரை ஆலையில் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் 2வது நாளாக ஈடுபட்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டம் புகழூரில் தனியார் (ஈ.ஐ டி பாரி) சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இதில் 150 நிரந்தர பணியாளர்களும் 100 தற்காலிக பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். நிரந்தர தொழிலாளர்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்பபட கோரியும், 8 வருடங்களாக ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை முடிக்கப்படாமல் இருப்பதை தொடங்க கோரியும், ஆலையில் உள்ள முதலுதவி மையத்தில் முறையான மருத்துவர்களோ மருத்துவ வசதிகளோ கிடையாது அவற்றை ஏற்படுத்தி தரக் கோரியும்,
இந்த கோரிக்கைகளை வைத்து போராடிய 5 தொழிற்சங்க தலைவர்களை நிர்வாகம் தற்காலிக பணி நீக்கம் செய்து விட்டதை கண்டித்தும் நேற்று காலை முதல் தொழிலாளர்கள் ஆலையின் உள்ளே காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று காலை துவங்கிய போராட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று 2வது நாளாக அவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உடைந்தது பழமை வாய்ந்த கும்ப குளி பாலம்.
மாயனூரில் பழமை வாய்ந்த கும்பக்குழி பாலம் உடைந்தது. இதனால் ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. காவிரி கரையில் உள்ள கும்பக்குழி பாலம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. கரூர் வழியாக வரும் அமராவதியின் கடைமடை பகுதி என வனவாசியிலிருந்து வரும் தண்ணீர் இந்த கும்ப குளி பாலம் வழியாக காவிரியில் கலந்து வந்தது. மேலும் மாயனூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வடிகால் வழியாக வரும் மழை நீரும் இந்த பாலம் வழியாக காவிரியில் கலந்து வந்தது.
இப்போது புதிய பாலம் கட்டப்பட்ட பயன்படுத்தப்பட்டு வருகிறது. காவிரி கரை மீது அமைந்துள்ள இந்த பாலம் வழியாகத்தான் கீழ மாயனூர் மேல மாயனூர் வனவாசி கட்டளை ரங்கநாதபுரம் ஆகிய கிராமங்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். மேலும் கரூரில் இருந்து கட்டளை ரங்கநாதபுரம் மேலும் வரை காவிரி கரையில் அமைக்கப்பட்டுள்ள சாலையில் டவுன் பஸ் போக்குவரத்து நடந்து வருகிறது. மிகவும் பழமை வாய்ந்த கும்பக்குழி பாலம் நாளுக்கு நாள் வலுவிழந்து வந்த நிலையில் நேற்று மாலை திடீரென்று பாலத்தின் ஒரு பகுதி பெயர்ந்து விழுந்தது.
இதனால் மாயனூர் காவிரி கரை பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக ஐந்து மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து தடைப்பட்டு உள்ளது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த பாலத்தை உடனடியாக சீரமைத்தால் தான் போக்குவரத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.