விழுப்புரம் : விக்கிரவாண்டி - தஞ்சாவூர் சாலைத் திட்டம் கோலியனூர் கூட்டுரோட்டில் ரூ. 1.8 கி.மீ தூர உயர்மட்ட மேம்பாலப் பணிகள் தீவிரம்.

Continues below advertisement

விக்கிரவாண்டி - தஞ்சாவூர் சாலைத் திட்டம்

விழுப்புரம் மாவட்டத்தின் மிக முக்கியமான போக்குவரத்து சந்திப்பான கோலியனூர் கூட்டுரோடு பகுதியில், விக்கிரவாண்டி - தஞ்சாவூர் (வி.கே.டி) நான்கு வழிச்சாலைத் திட்டத்தின் கீழ் புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் மிக வேகமாகத் தொடங்கியுள்ளன. பல ஆண்டுகளாக இழுபறியில் இருந்த இத்திட்டம் தற்போது புதிய வேகமெடுத்துள்ளது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

திட்டத்தின் பின்னணி மற்றும் தாமதம்மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூர் இடையே 165 கி.மீ தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டம் கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. விக்கிரவாண்டி - சேத்தியாத்தோப்பு (66 கி.மீ) இப்பணிகளை ரிலையன்ஸ் கட்டுமான நிறுவனம் மேற்கொண்டது.

Continues below advertisement

சேத்தியாத்தோப்பு - தஞ்சாவூர் (99 கி.மீ):

இப்பணிகளை வதோதரா படேல் கட்டுமான நிறுவனம் மேற்கொண்டது. இருப்பினும், குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்காத காரணத்தால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கேரளாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றிற்கு மீதமுள்ள பணிகள் ஒப்பந்தம் விடப்பட்டு, தற்போது பணிகள் மீண்டும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

கோலியனூர் உயர்மட்ட மேம்பாலம்: 

ஒரு பார்வைவிக்கிரவாண்டி - கும்பகோணம் சாலை மற்றும் விழுப்புரம் - புதுச்சேரி சாலை ஆகிய இரண்டு பிரதான நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடமாக கோலியனூர் கூட்டுரோடு திகழ்கிறது. இதனால் இங்கு ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க இந்த உயர்மட்ட மேம்பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இந்த மேம்பாலம் மொத்தம் 1.8 கி.மீ நீளம் கொண்டதாக அமைகிறது. இதில் மொத்தம் 16 பிரம்மாண்ட தூண்கள் (Pillars) அமைக்கப்பட உள்ளன. 

6 வழிச்சாலை தரத்தில் அமையவுள்ள இந்த மேம்பாலத்தின் மேலே விக்கிரவாண்டி - தஞ்சாவூர் செல்லும் வாகனங்கள் செல்லும். பாலத்தின் கீழே விழுப்புரம் - புதுச்சேரி மற்றும் பண்ருட்டி செல்லும் வாகனங்கள் செல்லும் வகையில் தரைமட்டச் சாலைகள் அமையும். 

சர்வீஸ் சாலைகள் :

மேம்பாலத்தின் இருபுறமும் தடையற்ற போக்குவரத்திற்காக அகலமான சர்வீஸ் சாலைகளும் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போதைய கள நிலவரம்மேம்பால கட்டுமானப் பணிகளின் முதற்கட்டமாக, கோலியனூர் கூட்டுரோடு பகுதியில் பல ஆண்டுகளாக இருந்த பழைய ரவுண்டானாவை கனரக வாகனங்கள் மற்றும் ஜே.சி.பி இயந்திரங்கள் கொண்டு இடித்து அகற்றும் பணிகள் நேற்று தொடங்கின.

நிலம் கையகப்படுத்தும் பணிகள்

ஏற்கனவே விக்கிரவாண்டியில் இருந்து கோலியனூர் வரை சுமார் 10 கி.மீ தூரத்திற்கு சாலை விரிவாக்கப் பணிகள் முடிவடைந்துவிட்டன. கோலியனூர் பகுதியில் மட்டும் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் பிற காரணங்களால் தாமதமான நிலையில், தற்போது பாலம் கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. காலக்கெடு மற்றும் போக்குவரத்து மாற்றம் இந்த மேம்பாலப் பணிகளை அடுத்த 3 மாதங்களுக்குள் முழுமையாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஒப்பந்த நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. 

போக்குவரத்து மாற்றம்

கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால், விக்கிரவாண்டி, பண்ருட்டி மற்றும் புதுச்சேரி மார்க்கமாகச் செல்லும் வாகனங்கள் நெரிசலில் சிக்காமல் இருக்க, தற்காலிகச் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது. பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் மற்றும் கட்டுமானப் பணியாளர்கள் இரவு பகலாகப் பணியாற்றி வருகின்றனர்.