முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவு திட்டமான  குடகனாறு பாசன திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கரூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாய சங்க தலைவர்  செல்வராஜ்  கோரிக்கை விடுத்தார்.


கரூர் மாவட்டத்தின் மேற்கு பகுதியாக உள்ள அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதி வறட்சி பகுதியாக உள்ளது. அமராவதி, காவிரி நதிகள் பாய்ந்த போதும் அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதி எப்போதும் வறட்சியான பகுதியாகவே காணப்படுகிறது.


 




 


அமராவதி ஆறுகளில் தொடர்ச்சியாக நீர் வரத்து இருப்பதில்லை. இதனை, கருத்தில் கொண்டு தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி முதன்முதலாக குளித்தலை சட்டமன்ற தொகுதியில் 1957 இல் போட்டியிட்டபோது குடகனாறு தண்ணீரை கரூருக்கு கொண்டு வர முயற்சிகள் எடுப்பேன் என உறுதி அளித்தார். அதன்படி திண்டுக்கல் பகுதியில் குடகனாறு அணை கட்டப்பட்டது. ஆரம்ப காலத்தில் அங்கிருந்து கரூர் மாவட்டத்திற்கு முறையாக தண்ணீர் வந்த நிலையில் கடந்த பல வருடங்களாக தற்போது தண்ணீர் வரத்து இல்லை. இதனால், இந்த நீர் ஆதாரத்தை பயன்படுத்தி வந்த விவசாயிகள் தற்போது கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மேலும், திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் தடுப்பு சுவர் கட்டி தண்ணீரை தடுத்து விட்டனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கும் தமிழக அரசுக்கும் பலமுறை மனு செய்தும், இதுவரை அரவக்குறிச்சிக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. இது முன்னாள் முதல்வர் கருணாநிதி கனவு திட்டமாகும். எனவே, இத்திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். எனது விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் விழிப்புணர்வு சங்க மாவட்ட தலைவர் செல்வராஜ் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார்.


 


 





157 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் கரூர் கலெக்டர் அழைப்பு.


கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் எடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, கருர் மாவட்டத்தில் உள்ள, 157 கிராம ஊராட்சிகளிலும் நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி தினத்தன்று, பல்வேறு பொருட்களை உள்ளடக்கிய கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.


தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவி குழுக்களை கவுரவித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், மக்கள் திட்டமிடல் இயக்கம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இணைய வழி வீட்டு வரி, தொழில் வரி செலுத்துதல், மகளிர் சுய உதவி குழு உருவாக்குதல், பண்ணை மற்றும் பண்ணை சாரா தொழில்கள், மக்கள் நிலை ஆய்வு, (மக்கள் நிலை ஆய்வு பட்டியலில் விடுபட்ட புதிய இலக்கு மக்கள் குடும்பங்களை சேர்த்தல்) ஆகியவை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது சம்பந்தமாக நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.


 




 


எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி பொதுமக்கள் அனைவரும் உள்ளாட்சி தினத்தன்று நடைபெறும், கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.