Jayakumar: செந்தில் பாலாஜிக்கு சிறையில் வசந்த மாளிகை போல வசதிகள் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு..!

மக்கள் வரி பணத்தில் அமைச்சராக செந்தில் பாலாஜி ஏன் தொடர வேண்டும்? என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Continues below advertisement

Jeyakumar: மக்கள் வரி பணத்தில் அமைச்சராக செந்தில் பாலாஜி ஏன் தொடர வேண்டும்? என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Continues below advertisement

”ஆகஸ்ட் 20ல் மாநாடு":

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்  பேசியதாவது, ”அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பொதுச் செயலாளர் அறிவிப்பில் பல்வேறு குழுக்கள் ஆலோசனை மேற்கொள்கிறது. எழுச்சி மாநாட்டை இந்திய துணை கண்டமே திரும்பிப் பார்க்கக் கூடிய வகையில் லட்சக்கணக்கான மக்கள் தொண்டர்கள் வந்து அதன் மூலம் சரித்திரம் படைக்க வேண்டும். கழகத்தில் கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை எழுச்சி மாநாட்டை ஒரு வீர வரலாற்றை படைக்கும் வகையில் செயலாற்ற உள்ளோம்.

அமைச்சர் பொன்னியின் தலைமையில் தீர்மானி குழு இன்று கூடி மாநாட்டில் நிறைவேற்றப்படக்கூடிய தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. திமுக தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் அதை மக்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது” என்றார். 

"வசந்த மாளிகை போல வசதிகள்": 

தொடர்ந்து பேசிய அவர், ”செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில்தான் இருக்கிறார், அன்று அவருக்கு ஏ க்ளாஸ் 
வகுப்பு தரப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறையில், வசந்த மாளிகை போல வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. சிறையில் பல்வேறு விதிகள் மீறப்பட்டு வருகிறது. இதனை அமலாக்கத்துறை கவனத்தில் கொள்ள வேண்டும். 

செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கினால் திமுக ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற அச்சத்தில் தான் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கவில்லை.  செந்தில் பாலாஜி ஒரு ஏக்நாத் ஷிண்டேவாக கூட மாறலாம்.   தமிழகமே அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சரவிலிருந்து நீக்க வேண்டும் என்று கூறினாலும், ஆட்சி போய்விடும் என்று அவரை அமைச்சரவையில் வைத்துள்ளனர்" என்றார். 

”மரண தண்டனை வழங்க வேண்டும்”:

மேலும், ”தேர்தல் நேரத்தில் குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் என்று முதல்வர் கூறியிருந்தார். அப்படி என்றால் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். ஆனால் இப்பொழுது ஆயிரம் ரூபாய் வாங்குவதற்கு 1008 விதிமுறைகள் வகுத்திருக்கிறார்கள். திமுக கார்டு வைத்திருந்தால்தான் ஆயிரம் ரூபாய் அதிமுகவிற்கு ஓட்டு போட்டால் பணம் இல்லை என்று கூட கூறுவார்கள். 
 
தகுதியுடைய குடும்பத் தலைவிகளுக்கு மட்டும்தான் ஆயிரம் ரூபாய் தரப்படும் என்றால் திமுக உறுப்பினர் அட்டை வைத்திருப்பவர்களுக்கும் ஒன்றிய வட்ட மாவட்ட செயலாளர்கள் யாரை காட்டுகிறார்களோ அவர்களுக்கு தான் வழங்கப்படுமா? தகுதி  இருந்தும் மகளிர் உரிமைத் தொகை பெற முடியாத குடும்பத் தலைவிகள் நிச்சயமாக அவர்களின் கோபத்தை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கச் செய்வார்கள்” என்றார்.

யாருமே ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு ஈனத்தனமான செயல் மணிப்பூரில் நடைபெற்று உள்ளது. மத்திய அரசை பொருத்தவரை உடனடியாக சுமுக நிலை ஏற்படுத்தி மேற்கொண்டு இந்த பிரச்சனை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் அதுவே நல்ல விஷயம். குற்றம் புரிந்தவர்களுக்கு மரண தண்டனை வாங்கி கொடுக்கப்படும் என்று மணிப்பூர் முதலமைச்சர் கூறி இருக்கிறார் அதை செய்ய வேண்டும். மரண தண்டனை கொடுக்க வேண்டும் அப்போதுதான் பயம் இருக்கும்” என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola