திமுகவில் மாவட்ட செயலாளர்களின் உச்சபட்ச வயது 70 ஆக நிர்ணயம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், எ.வ. வேலு, அனிதா ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட 13 பேர் பதவியை இழக்க வாய்ப்புள்ளது.
சென்னை அறிவாலயத்தில் இன்று திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்த்தியும், மாவட்ட செயலாளர்களின் வயது வரம்பு உயர்த்தியும், 2 முறை மட்டுமே ஒருவ மாவட்ட செயலாளராக இருக்கு முடியும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம்
திராவிட முன்னேற்றக் கழகம் எனும் நம் பேரியக்கத்தின் இரத்தநாளங்களாக விளங்குபவை மாவட்டக் கழகங்கள். தற்போதுள்ள மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கை இதுவரை 77 ஆக வைத்துள்ளோம்.
வருவாய் மாவட்டங்களை அடிப்படை அலகாகக் கொண்டு இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்ற வகையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு பிரித்த பிறகு, ஒரு வருவாய் மாவட்டத்தில் ஒரு சட்டமன்றத் தொகுதி மட்டும் எஞ்சும் நிலை ஏற்பட்டால், அந்தத் தொகுதி அதே வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட பொருத்தமான கழக மாவட்டத்துடன் மூன்றாவது தொகுதியாக இணைக்கப்பட வேண்டும்.
கழகத்தின் நிர்வாகத்தில் வாய்ப்புகளை விரிவுபடுத்த மாவட்டக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 70 என நிர்ணயிக்கப்படுகிறது. அதேபோல், மாவட்டக் கழகச் செயலாளராகும் ஒருவர் அதிகபட்சமாக மூன்று முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும்.
இதனடிப்படையில், தற்போதுள்ள 77 மாவட்டக் கழகங்கள், 110-ஆக அதிகம் ஆகும். மாவட்டக் கழகங்கள் அதிகரிக்கின்ற காரணத்தால் மாநகரச் செயலாளர்கள் எனும் பொறுப்பின் தேவை எழவில்லை என்பதை இக்கூட்டம் கருத்தில் கொள்கிறது.
அமையவுள்ள இந்த 110 மாவட்டக் கழகங்களில் இடம்பெறவுள்ள தொகுதிகளைக் கழகத் தலைவர் அவர்களே முடிவெடுத்து அறிவிக்க இந்தத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
திமுகவின் இந்த தீர்மானத்தால் மூத்த தலைவர்களான 13 பேர் மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அது யார்?, யார்? என்பதை பார்க்கலாம்.
யார் அந்த 13 பேர்?
* எ.வ.வேலு - திருவண்ணாமலை தெற்கு
* எஸ்.ஆர்.சிவலிங்கம் - சேலம் கிழக்கு
* ரகுபதி - புதுக்கோட்டை தெற்கு
* எஸ்.ஆர்.சிவலிங்கம் - சேலம் கிழக்கு
* அனிதா ராதா கிருஷ்ணன் - தூத்துக்குடி தெற்கு
* அன்பழகன் - தஞ்சை வடக்கு
* சுந்தர் - காஞ்சிபுரம் தெற்கு
* செஞ்சி மஸ்தான் - விழுப்புரம் வடக்கு
* கோ.தளபதி - மதுரை மாநகரம்
* கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் - விருதுநகர் தெற்கு
* ஆர்.காந்தி - ராணிப்பேட்டை
* முத்துசாமி - ஈரோடு தெற்கு
* சாக்கோட்டை அன்பழகன் - தஞ்சாவூர் வடக்குzழ்ழ்ழ்
* எ.வ.வேலு - திருவண்ணாமலை தெற்கு
* எஸ்.ஆர்.சிவலிங்கம் - சேலம் கிழக்கு
* ரகுபதி - புதுக்கோட்டை தெற்கு
* எஸ்.ஆர்.சிவலிங்கம் - சேலம் கிழக்கு
* அனிதா ராதா கிருஷ்ணன் - தூத்துக்குடி தெற்கு
* அன்பழகன் - தஞ்சை வடக்கு
* சுந்தர் - காஞ்சிபுரம் தெற்கு
* செஞ்சி மஸ்தான் - விழுப்புரம் வடக்கு
* கோ.தளபதி - மதுரை மாநகரம்
* கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் - விருதுநகர் தெற்கு
* ஆர்.காந்தி - ராணிப்பேட்டை
* முத்துசாமி - ஈரோடு தெற்கு
* சாக்கோட்டை அன்பழகன் - தஞ்சாவூர் வடக்கு
