வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு எதிர்பார்த்த மழை பெய்தது. அதன் பின்னர், மழை சற்று குறைந்திருந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் வங்கக் கடலில் உருாவன காற்றழுத்தத் தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்றுள்ளது.
இதற்கு மாண்டஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. மாண்டஸ் என்ற பெயர் ஏன், யார் முடிவு செய்தார்கள்?
சரி இதை தெரிந்து கொள்வதற்கு முன்பு, புயலுக்கு ஏன் பெயர் சூட்டப்படுகிறது. இதை நாம் யோசித்துப் பார்த்து இருக்கிறோமா?
இந்த நடைமுறையானது உலக வானிலை அமைப்பு (WMO) வழங்கிய ஆணையைப் பின்பற்றுகிறது. இது குழப்பத்தைத் தவிர்க்க ஒவ்வொரு முறையும் சூறாவளிக்கு பெயரிடப்பட வேண்டும் என்று விளக்குகிறது.
இந்த பெயர்களை, வெப்ப மண்டல சூறாவளி ஆலோசனைகளுடன், ஆறு பிராந்திய சிறப்பு வானிலை மையங்கள் (RSMCs) மற்றும் ஐந்து பிராந்திய வெப்ப மண்டல புயல் எச்சரிக்கை மையங்கள் (TCWCs) உலகம் முழுவதும் இருந்து வழங்குகின்றன.
ஆறு பிராந்திய சிறப்பு வானிலை மையங்களில் இந்தியாவும் ஒன்று. வங்கதேசம், ஈரான், மியான்மர், மாலத்தீவு, ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) மற்றும் ஏமன் ஆகியவையும் இதில் அடங்கும்.
நாடுகளின் பெயர்கள் அகரவரிசையில் உள்ளன. மேலும் அவற்றின் பரிந்துரைக்கப்பட்ட தலைப்புகள் புதிய புயல்களின் பெயர்களாக சூட்டப்படுகின்றன. இதுவரை, தற்போதைய பட்டியல் 1ல் இருந்து 11 பெயர்கள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளன. நிசர்கா, கதி, நிவர், புரேவி, டௌக்டே, யாஸ், குலாப், ஷாஹீன், ஜவாத், அசானி மற்றும் சித்ராங் ஆகிய பெயர்கள் இதில் அடங்கும். இப்போது, மாண்டஸ். இது ஐக்கிய அரபு எமிரேட்ஸால் பரிந்துரைக்கப்பட்ட பெயர் ஆகும்.
இதனிடையே, 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 16 கி.மீ வேகமாக அதிகரித்துள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றது, அதையடுத்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
ஆழ்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, சென்னையிலிருந்து கிழக்கே, தென் கிழக்கே வங்க கடலில் நிலை கொண்டுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால், தற்போது அதன் வேகம் அதிகரித்து 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. காரைக்காலில் இருந்து 670 கி.மீ தூரத்தில் நிலை கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.