உலக சுகாதார நிறுவனத்தின் ஒட்டுமொத்தப் புள்ளிவிவரத்தின்படி 60 வயதுக்கு மேற்பட்டவர்களில்தான் அதிகக் கொரோனா மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இந்தியாவைப் பொருத்தவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறைகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்துள்ளன. இந்த நெருக்கடியை தவிர்க்க, யாரெல்லாம் வீட்டிலிருந்தபடியே கொரோனாவுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம் என்பதைப் பட்டியலிடுகிறார் தொற்றுநோய் நிபுணர் மருத்துவர் ஃபஹீம் யூனுஸ்.








அதன்படி



  • நீங்கள் 60 வயதுக்கும் குறைவானவர் என்றால்..

  • உங்களுக்கு நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் அல்லது புற்றுநோய் பாதிப்புகள் எதுவும் இல்லையென்றால்..

  • நீங்கள் நோய் எதிர்ப்பை கட்டுப்படுத்தும் மருந்துகளை உட்கொள்ளாதவர் என்றால்..

  • பல்ஸ் ஆக்ஸிமீட்டரில் 94 சதவிகிதத்துக்கும் அதிகமான எண்ணிக்கையைக் காண்பித்தால்ய்..

    நீங்கள் 10 முதல் 14 நாட்கள் வரை வீட்டிலேயே இருந்தபடியே மருத்துவரின் பரிந்துரையின் பேரில் காய்ச்சல் மற்றும் உடல் வலிக்கான மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகள் மற்றும் இதர மாத்திரைகளைத் தவிர்க்கவும் என்கிறார்.


Also Read:கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் ஆபத்தானதா, அவசியமானதா ? – தொடரும் குழப்பம்..