கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் மருத்துவமனைகளில் படுக்கைவசதித் தட்டுப்பாடு நிலவிவருகிறது. இதனால் வீட்டில் தனிமைப் படுத்திக்கொள்ளும் பெரும்பாலான நபர்கள் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் தாமாகவே ரெம்டெசிவிர் என்னும் வைரஸ் எதிர்ப்பு மாத்திரையை உட்கொண்டு வருகிறார்கள். கொரோனா வைரஸுக்கு எதிராக அரசு அதிகாரப்பூர்வமாகப் பரிந்துரைக்காத இந்த மாத்திரையை மக்கள் எடுத்துக்கொள்வது ஆரோக்கியமற்றது என மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள்.  






கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் அர்விந்தர் கூறுகையில், “ரெம்டெசிவிர் மருந்துகள் வாங்கித் தேக்கிவைப்பதை மக்கள் நிறுத்தவேண்டும். ரெம்டெசிவிர் கொரோனா நோயாளிகளின் உயிர்காக்கும் மருந்தில்லை. குறைந்தபட்சமாக நோயாளி மருத்துவமனையில் தங்கும் காலக்கட்டத்தை அது குறைக்கலாம். ஆனால் அப்படி எடுத்துக்கொண்டே ஆகவேண்டும் என்கிற கட்டாயம் ஏற்பட்டால் மருத்துவமனையில் மருத்துவர்கள் அருகில் இருக்கும் சமயத்தில் மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்” என அறிவுறுத்தியுள்ளார்.





இதற்கிடையே புதிய கொரோனா விதிகளை வகுத்துள்ளது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை



  1. மிகமிகச் சிறிய அளவிலான கொரோனா பாதிப்புகளுக்கு ப்யூடெசோனைட் மருந்து சுவாசிப்பதைப் பரிந்துரைத்துள்ளது

  2. அதற்கடுத்தகட்ட அளவிலான கொரோனா பாதிப்புகளுக்கு மக்கள் சர்வசாதாரணமாக ரெம்டெசிவிர் மருந்துகள் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்கச் சொல்லியுள்ளது.


  3. தேவைப்படும் சூழலில் மருத்துவமனையில் மட்டும் அவசரகாலச் சூழலிலோ அல்லது பரிந்துரைக்கப்படாமலோ (Emergency/Off the table) ப்ளாஸ்மா, டொஸ்சிலிஸுமாப் (Tocilizumab) மற்றும் ரெம்டெசிவிர் மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளது.


ஒருபக்கம் மருத்துவர்கள் ரெம்டெசிவிர் எடுத்துக்கொள்ளக்கூடாது எனப் பரிந்துரைக்கும் போது மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனையே Off the table முறையில் அதனை எடுத்துக்கொள்ளலாம் எனச் சொல்வது இந்த மருந்து தொடர்பான சர்ச்சையில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.