நாளை மற்றும் நாளை மறுதினம் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. இதனால் நேற்று முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக பலரும் சொந்த ஊர்களுக்கு படை எடுத்துள்ளனர். இதுவரை சுமார் 7 லட்சம் பேர் சென்னையில் இருந்து வெளியூருக்கு சென்றுள்ளனர். பூஜை விடுமுறை மற்றும் வார இறுதி நாட்கள் என்பதால் தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. 


சொந்த ஊருக்கு சென்றவர்கள் தங்களது குடுமபத்தினருடன் ஒன்றாக இணைந்து ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை கொண்டாடுவார்கள். ஆனால் சென்னையில் இருப்பவர்கள் பலரும் நாளையும் நாளை மறுநாளும் வெளியே சென்று கொண்டாடுவார்கள். சென்னையில் குடும்பத்தினருடன் கண்டு கழிக்கும் இடங்கள் ஏராளம். நல்ல நாள் என்பதால் பெரும்பாலான மக்கள் கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள். 


அப்படி இல்லாமல் வெளியே செல்ல நினைப்பவர்கள் சென்னை கிண்டியில் இருக்கும் சிறுவர் பூங்காவிற்கு செல்லலாம். குழந்தைகள் கண்டு களிப்பதற்கு இந்த பூங்காவில் பாம்பு பண்ணை, முதலைகள், மயில், பறவைகள் என நிறைய உள்ளது. அதுமட்டுமின்றி விளையாட்டு பூங்காவும் உள்ளது. கிண்டி சிறுவர் பூங்கா தவிற வண்டலூரில் இருக்கும் உயிரியல் பூங்காவிற்கு செல்லலாம். வண்டலூர் பூங்காவை சுற்றி பார்க்க ஒரு நாள் சரியாக இருக்கும். சிங்கம், புலி, சிறுத்தை, யானை, காட்டு எருமை, பறவை வகைகள், குரங்கு வகைகள் என வித விதமான வன விலங்குகளை இங்கு காணலாம். நல்ல பொழுது போக்காக இருக்கும். 


சென்னை ஈசிஆர் சாலையில் இருக்கும் மெரைன் கிங்கடம் மிகவும் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும். மீன் பிரியர்கள், சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவருக்கும் ஏற்ற இடம் என்றே சொல்லலாம். இங்கு ஆழ்கடலில் இருக்கும் மீன்கள் என வித்தியாசமான அறிய வகை மீன்களும் இங்கு இடம்பெற்றிருக்கும். 


சென்னையில் இருந்தப்படியே வெளியூர் அனுபவம் பெற வேண்டுமா? அப்போ அதற்கான சரியான இடம் தண்டலத்தில் இருக்கு சோக்கி தானி. சோக்கி தானி ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் கலச்சாரத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு இடமாகும். இங்கு ராஜஸ்தானி உணவகங்கள், ராஜஸ்தானி நடனம் என மக்களை கவரும் வகையில் ஏராளமான பொழுதுப்போக்கு அம்சங்கள் உள்ளது. காலையில் சென்றால் மாலை வரை நேரம் கழிப்பதற்கு ஒரு சிறந்த இடம் இதுவாகும். 


தூரமாக செல்ல விரும்பாதவர்கள் கடற்கரைக்கு செல்லலாம். வழக்கமான மெரினா கடற்கரை இல்லாமல் குடும்பத்தினருடன் திருவான்மியூர் கடற்கரைக்கு போகலாம், மாலை நேரங்களில் இங்கு வித்தியாசமான உணவு வகைகள் கிடைக்கும். சைனீஸ், இட்டாலியன், மெக்ஸிகன், காண்டினெண்டல் என அனைத்து வகையான உணவுகள் கிடைக்கும். கடற்கரை ஓரம் இது போன்ற அனுபவம் மனதுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். 


ஆன்மீக தளத்திற்கு செல்ல நினைப்போர் வழக்கமான கோயில்களை விட, வேறு கோயில்களுக்கு போகலாம். குறிப்பாக சிறுவாபுரி முருகன் கோயில், நித்தியக் கல்யாண பெருமாள் கோயில், பாடி சிவன் கோயில், இஸ்கான் கோயில், சோழிங்கநல்லூர் ப்ரித்தியங்கா தேவி கோயில் என பல இடங்கள் உள்ளது. 


Tej Cyclone: மக்களே.. இன்று மாலைக்குள் அதி தீவிர புயலாக மாறும் தேஜ் புயல்! மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை