நடப்பு ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று (31ஆம் தேதி) தொடங்கியது. நாடாளுமன்றத்தின் மரபுப்படி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். இந்த உரை முடிந்ததும் பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நாட்டின் 2023-2024ம் ஆண்டிற்கான பட்ஜெட் உரையை தாக்கல் செய்தார். இந்த ஆட்சியின் கடைசி முழுநேர பட்ஜெட் இதுவாகும்.  நாட்டின் வரவு செலவு திட்டங்களை மத்திய நிதியமைச்சர் ஆண்டுக்கு ஒரு முறை அறிக்கையாக தாக்கல் செய்வார். இதுவே, மத்திய பட்ஜெட் என அழைக்கப்படுகிறது. கூட்டத்தொடரின் முதல் அமர்வு அடுத்த மாதம் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டாவது அமர்வானது மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனிடையே மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.




இந்நிலையில் மதுரை தோப்பூர் பகுதியில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை என தமிழக எம்.பி.க்கள் திடீரென  செங்கலை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற வளகாத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக கையில் எய்ம்ஸ் என்ற எழுத்துக்கள் எழுதப்பட்ட  செங்கலை ஏந்தி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து தமிழ்நாடு எம்.பிக்களனா  கார்த்தி சிதம்பரம், மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன், விஜய் வசந்த், செல்லக்குமார், ஞானதிரவியம், நவாஸ்கனி உள்ளிட்டோர் முழக்கங்களை எழுப்பினர்.




மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை உடனடியாக கட்ட வேண்டும். தற்போது இந்த மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட கல் மட்டும்தான் உள்ளது. இதுவரை எந்தவொரு கட்டிடமோ, மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இராமநாதபுரத்தில் படித்து வருகின்றனர். எனவே, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை உடனடியாக கட்டு, மாணவர்கள் படிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும் ன கடந்த வாரம் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையில் மதுரையில் செங்கல் வைத்து போராட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க., கூட்டணிகள் கட்சியினர் கலந்து கொண்டது குறிப்பிடதக்கது. தற்போது எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை என தமிழக எம்.பி.க்கள் திடீரென  செங்கலை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Budget 2023: ஹாப்பி நியூஸ் மக்களே... அதிரடியாக குறைகிறது செல்போன், டி.வி. விலை..! பட்ஜெட்டில் அறிவிப்பு..!