சேலம் மாநகர் நான்கு ரோடு பகுதியில் உள்ள மூவேந்தர் அரங்கத்தில் தனியார் கல்வி அறக்கட்டளை மற்றும் தனியார் தொலைக்காட்சி இணைந்து நடத்திய கல்வி கண்காட்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு தொடக்கி வைத்தார். இதைதொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்,  மாணவர்கள் செல்வங்கள் கடினமான கல்வி கற்று உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளது. குறிப்பாக அதிமுக ஆட்சியில் இருந்தபோது 2011 முதல் 2021 ஆம் ஆண்டு வரை கல்வியில் தமிழகத்தில் புரட்சியும், மறுமலர்ச்சியும் ஏற்படுத்தியது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது தான் கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது என்று கூறினார்.



ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர் நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி என பல பள்ளிகளை உருவாக்கி சாதாரண குடும்பத்தில் பிறந்த மாணவ, மாணவிகள் கூட கல்வி கற்பவர்களான சூழ்நிலையை உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளது. அதிமுக அரசு மாணவ மாணவிகளுக்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 11 மருத்துவக் கல்லூரிகள், ஏழு சட்டக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், வேளாண்மை கல்லூரிகள் என பல கல்லூரிகள் உருவாக்கியதன் மூலமாக ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த மாணவர்கள் கூட குறைந்த கட்டணத்தில் உயர் கல்வி படிப்பதற்கான சூழ்நிலையை உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்றபோது உயர் கல்வி படிப்பவர்கள் எண்ணிக்கை 32 சதவீதமாக இருந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக அரசு தொடர்ந்து கல்வியில் கவனம் செலுத்தி, மற்ற துறைகளை காட்டிலும், கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கி இந்தியாவிலேயே உயர்கல்வி படிப்பவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ள மாநிலம் தமிழகம் என்ற பெருமை பெற்றது.



குறிப்பாக 2030 ஆம் ஆண்டில் உயர்கல்வி படிப்பவர்களின் இலக்கை 2019-20-ல் அடைந்துவிட்டதாக பெருமிதம் தெரிவித்தார். 2019-20 ஆம் ஆண்டுக்குள் 52 சதவீதம் உயர் கல்வி படிப்புக்குள் சதவீதமாக உயர்த்தப்பட்டது. கல்வியில் மறுமலர்ச்சி, புரட்சி உருவாக்கி தமிழகத்திலேயே உயர் கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை உயர்த்தியது. சாதாரண குடும்பத்தில் பிறந்த மாணவ, மாணவிகள் கூட எளிதாக உயர்கல்வி படிப்பதற்கான சூழ்நிலையை அதிமுக உருவாக்கி கொடுத்ததாக பெருமிதம் தெரிவித்தார். அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மருத்துவக் படிப்பு, பல் மருத்துவ படிப்பு எட்டாக கனியாக இருந்தது. தமிழகத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சுமார் 41 சதவீதம் உள்ளன. 2016-17 ஆம் ஆண்டு வெறும் 9 பேர் மட்டும் தான் மருத்துவக் கல்லூரி சேர்ந்து படித்து வந்தனர். மூன்று லட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளியில் வெறும் ஒன்பது பேர் மட்டும் தான் நீட்தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பை படித்து வந்தனர். இதனை கவனத்தில் கொண்டு செயல்பட்டு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு கொண்டு வந்து மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஏற்படுத்தப்பட்டது என்றும் கூறினார். 


இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார்.