தமிழ்நாட்டில் தமிழ் புத்தாண்டு சித்திரை 1-ஆம் தேதி விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் ஏப்ரல் 14ஆம் தேதியான நாளை தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.  உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் இந்த நாளில் தான் தமிழ் புத்தாண்டை கொண்டாடுகின்றனர். அசாம், கேரளா, மணிப்பூர் போன்ற மாநிலங்களிலும், நேபாளம், பர்மா, இலங்கை போன்ற அண்டை நாடுகளிலும் சித்திரை மாதத்தில் தான் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. 

 

புத்தாண்டு அன்று வீடுகளை சுத்தம் செய்து, அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து தலை குளித்து புத்தாடைகளை அணிந்து , மா, பலா மற்றும் வாழை ஆகிய முக்கனிகளை கொண்டு தலை வாசலை அலங்கரித்து, இனிப்பு உள்ளிட்டவற்றை படையலிட்டு சாமி கும்பிடுவது வழக்கம்.

தமிழ் புத்தாண்டு பச்சடி


மேலும் முக்கியமாக இந்த நாளில், மாங்காய், வேப்பம் பூ, வெல்லம் உள்ளிட்டவற்றை சேர்த்து அறுசுவை நிறைந்த பச்சடி தயாரித்து வீட்டில் உள்ள அனைவரும் சுவைக்கின்றனர். இந்த பச்சடி ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மேலும் வருடத்தின் முதல் நாளை போலவே அனைத்து நாட்களிலும் அறுசுவை நிரம்ப வேண்டும் என்பதற்காகவே இந்த பச்சடி தயாரித்து சாப்பிடும் வழக்கம் கடை பிடிக்கப்படுகிறது. 

வழிபட நல்ல நேரம்


தமிழ் புத்தாண்டு அன்று வழிபாடு செய்ய நினைப்பவர்கள் பிரம்ம முகூர்த்த வேளையில் வழிபட்டால் நல்லது என்று சொல்லப்படுகிறது.  காலை வேளையில் 7.30 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலையில் 3.45 மணியிலிருந்து, 4.30 வரையிலும் நல்ல நேரமாக உள்ளது. காலை 10.30 மணியிலிருந்து நண்பகல் 12 மணி வரை பூஜை நல்ல நேரம் ஆகும்



 தமிழ் புத்தாண்டில் குறிப்பாக அரிசி, உப்பு, மஞ்சள், வெல்லம் ஆகியவற்றில் ஒன்றையாவது வாங்கி சாமியின் திருவுருபடத்திற்கு முன்னால் வைத்து வழிபட மறக்க வேண்டாம்.  இப்படி வழிபட்டால் ஆண்டு முழுவதும் வீட்டில் மகிழ்ச்சி தங்கும் என்பது நம்பிக்கை. 


மேலும் படிக்க 


Lok Sabha Election 2024: இபிஎஸ் தலைமையிலான அதிமுக இருக்காது - அண்ணாமலை


Rashmika Mandana : என்னைவிட அழகான பெண்கள் இருக்கிறார்கள்... தன்னடகத்தோடு பதில் சொன்ன ராஷ்மிகா மந்தனா