அக்வான் புயல் மிக தீவிரப்புயலாக வலுப்பெற்று ஆந்திர மாநிலத்தை ஒட்டிய பகுதிகளில் கரையை கடக்குமென வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. நாளை புயலாகவும், 17ஆம் தேதி தீவிரப் புயலாகவும் வலுவடையக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாற உள்ள நிலையில் இது வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து அதிதீவிர புயலாக மாறி ஆந்திரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வங்கக்கடலில் உருவான அர்னாப் மற்றும் முரசு புயல்கள் ஆந்திரப்பகுதியிலேயே கரையை கடந்தன. இதைப்போன்றே நாளை உருவாக வாய்ப்புள்ள அக்வான் புயலும் ஆந்திரக்கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எங்கு எங்கு மழைக்கு வாய்ப்பு?
புயல் உருவான பின்னர் அது ஆந்திர மற்றும் வடக்கு நோக்கி நகரக்கூடுமென்பதால் ஆந்திர மற்றும் ஒடிசா மாநிலங்களில் தீவிர மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் வருகிற 17-ஆம் தேதியன்று சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழைக்கும், 18 மற்று 19 ஆம் தேதிகளில் இதே மூன்று மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்டும் விடுக்கப்பட்டுள்ளது.இவற்றை தவிர இதர வடமாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
