சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “வெப்பச்சலனம் காரணமாக இன்று கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென்மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.




சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசை ஒட்டியிருக்கும். அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசை ஒட்டியிருக்கும்.


மேலும் படிக்க : ’பிரபஞ்சத்தின் மிகப்பெரிய போர் தியேட்டருக்கு வருது ‘ - இன்ப அதிர்ச்சி கொடுத்த மார்வெல் இந்தியா!


கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கோயம்புத்தூர் மாவட்டம் சோலையாற்றில் 11 செ.மீ., சின்னக்கல்லாறு, சின்கோனா பகுதிகளில் தலா 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணை, புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில், சென்னையில் பெரம்பூர், கன்னியாகுமரி சூரலக்கோடு, தென்காசி ஆயக்குடி, தென்காசி, ராமநாதபுரம் தொண்டி, தேனி தேக்கடி, தஞ்சை பட்டுக்கோட்டை, கன்னியாகுமரி புத்தான் அணை, புதுக்கோட்டை காரையூர் ஆகிய பகுதிகளில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 




தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. கேரளாவில் கனமழையால் அந்த மாநிலமே தத்தளித்து வரும் சூழலில், கன்னியாகுமரியிலும் கனமழை தொடர்ந்து பொழிந்து வருகிறது. இந்த நிலையில், சேலத்திலும் கனமழை காரணமாக அங்குள்ள வயல்வெளிகளில் மழைநீர் சூழ்ந்து கொண்டது. இதனால், பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண