சென்னை உயர்நீதிமன்ற என்ன சொல்கிறதோ அதை நாங்கள் ஏற்போம் என்று ஓ.பன்னீர் செலவம் ஆதரவாளரான ஆர். வைத்தியலிங்கம் கூறியுள்ளார்.


அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான விவாரகத்தில் சென்னை உயர்நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதை ஏற்று நடக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடலாம் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதையும் அவர் குறிப்பிட்டு பேசியுள்ளார்.


அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான வைத்திலிங்கம் சென்னை பசுமை வழி சாலையில் செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது பேசிய அவர், "கொடநாடு விவகாரத்தில் பல பேர் உண்மையான குற்றவாளியை கண்டு பிடிக்க வேண்டும் என கூறி வருகின்றனர். தமிழ்நாடு அரசு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என பல பேர் கோரிக்கை வைக்கிறார்கள்.


எங்களை வளர்த்து அரசியலில் ஆளாக்கிய அம்மாவின் வீட்டில் நடந்த இந்த சம்பவத்தில் வெளி உலகத்திற்கு குற்றவாளியை கண்டுபிடித்து தண்டிக்க பட வேண்டும் என்பது தான் அதிமுகவின், தொண்டனின் எண்ணமாக இருக்கிறது.


உச்ச நீதிமன்ற தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்.” என்றார்.


இன்னும் சில மணி துளிகளில் சென்னை உயந்தீமன்றத்தில் வழக்கு விசாரணை:


சென்னை உயர்நீதிமன்றத்தில்  ஓ.பி.எஸ். மனு மீது 2.15 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.


வரும் 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவிற்கு தடைகோரி ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் பிற்பகலில் 2.15 மணிக்கு விசாரணைக்கு நடைபெற இருக்கிறது. நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வருகிறது.


இ.பி.எஸ். தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் விஜய் நாராயண், எஸ். ஆர். ராஜகோபால் ஆகியோர் ஆஜராக உள்ளனர். ஓ.பி.எஸ். தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராக உள்ளார். அதிமுக பொதுக்குழு தொடர்பாக தனிநீதிபதி பிறப்பிக்கும் உத்தரவே இறுதியானது என  உச்ச நீதிமன்றம் இன்று  தெரிவித்திருந்தது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண