7 பேர் விடுதலையில் உச்சநீதிமன்றம் நல்ல முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம். இதுதொடர்பாக ஆளுநரிடம் மீண்டும் அழுத்தம் கொடுக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். சிறைவாசிகளை பார்ப்பதற்கு லஞ்சம் கேட்பது குறித்து புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். சிறைச்சாலையில் மோசடி நடைபெற்றதற்கான குற்றம் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
சேலம் மத்திய சிறையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திடீர் ஆய்வு செய்தார். மத்திய சிறைக்குள் சென்று இன்றைய நிலவரம், கைதிகளின் நிலைமை, தேவைகள் கண்டறிந்து செல்வதற்கான ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, சேலம் மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணைக் கைதிகள் என 1350 நபர்கள் உள்ளன, பெண்கள் சிறையில் 78 பேர்கள் உள்ளனர். 10 நாட்களுக்கு ஒருமுறை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. குறிப்பாக மத்திய சிறைக்கு கொண்டு வருவதற்கு முன்பாகவே மாவட்ட சிறைகளில் முழுமையாக பரிசோதனை பிறகு மத்திய சிறைக்கு அனுப்புகிறது சிறையில் உள்ள கைதிகளுக்கு கொரோனா பற்றிய அச்சமும் பயமும் தேவையில்லை என்று கூறினார்.
மேலும் வீரப்பனின் மூத்த சகோதரர் மாதையன் 34 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர் சிறப்பு பரோல் கேட்டால் கொடுப்பதில் பிரச்சினையில்லை, முன் விடுதலை குறித்து அரசு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுதலை குறித்து பரிசீலிக்கப்படும் என்றார். தமிழகத்தில் சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே விடுதலைக்கு பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது ஒவ்வொருவருக்கும் தனித்தனி அரசாணை வெளியிடப்பட இருப்பதால் முதற்கட்டமாக கடலூர், வேலூர் சிறைச்சாலை நன்னடத்தை சிறைவாசிகள் கோப்புகள் அனுப்பப்பட்டு முதலமைச்சர் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது .முதலமைச்சர் பார்த்தபிறகு ஆளுநருக்கு அனுப்பப்படும் ஆளுநரின் அனுமதி பெற்ற பிறகு விடுதலை செய்யப்படும் என்று கூறினார்.
சிறையில் நடந்த மோசடி குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, மோசடிகளுக்கு எப்பொழுதும் அரசு துணை போகாது, மோசடிகள் இருந்தால் அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 2.5 கோடி ரூபாய் வரை மோசடி நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை, மோசடி நடைபெற்றதற்கான குற்றம் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். சிறைச்சாலையில் உள்ள நபர்களை பார்ப்பதற்கு லஞ்சம் கேட்பது குறித்து யார் புகார் அளித்தாலும் அதன் மீது நடவடிக்கை எடுத்து முறையான விசாரணை நடத்தப்படும்
7 பேர் விடுதலை குறித்து நளினி தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. ஆளுநரை முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் இருந்து நல்ல முடிவை வரும் என்று எதிர்பார்க்கிறோம். இது தொடர்பாக மீண்டும் ஆளுநரிடம் அழுத்தம் கொடுக்கப்படும் என்றும் கூறினார்.