அமராவதி ஆற்றில் பெரிய ஆண்டாங் கோவில் தடுப்பணைக்கு இன்று தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.


திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் இருந்து காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 1044 கன அடி தண்ணீர் வந்தது. இந்நிலையில் ஆற்றில் வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 87.67 கன அடியாக நீர்மட்டம் உள்ளது. மேலும் கரூர் அருகே உள்ள பெரிய ஆண்டாங் கோவில் தடுப்பணைக்கு நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 3,130 கன அடி தண்ணீர் வந்தது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி 2316 கன அடி தண்ணீராக குறைந்துள்ளது.


 




 


கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையில் தண்ணீர் வரத்து நிலவரம்


கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி ஆற்று கதவனைக்கு நேற்று வினாடிக்கு 18 ஆயிரத்து 372 கனஅடி தண்ணீர் வந்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 13 ஆயிரத்து 167 கன அடி தண்ணீராக தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இந்நிலையில் டெல்டா பாசத்திற்காக காவிரி ஆற்றில் இருந்து 11 ஆயிரத்து 947 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் நான்கு பாசன வாய்க்காலில் 1,220 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.


 




நங்காஞ்சி அணையின் தண்ணீர் வரத்து நிலவரம்.


திண்டுக்கல் மாவட்டம், நங்காஞ்சி அணைக்கு வடகாடு மலைப்பகுதிகளில் மழையின் காரணமாக காலை நிலவரப்படி 53 கன அடி தண்ணீர் வந்தது. மேலும் 39.37 கனடியாக உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 35.27 கனடியாக உள்ளது. அணையிலிருந்து தற்போது தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.


கரூர் மாவட்டம் ஆத்துப்பாளையம் அணையின் தற்போதைய தண்ணீர் நிலவரம்.


கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு காலை நிலவரப்படி 38 கனஅடி தண்ணீர் வந்தது. மேலும் , 26.90 கனஅடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 24.46 கன அடியாக குறைந்து உள்ளது. மேலும், அணையில் இருந்து நொய்யல் ஆற்றுக்கு தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


 




 


கரூர் மாவட்டத்தில் இன்று மழை நிலவரம்.


கரூர் மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி குறிப்பிட்ட இடங்களிலேயே மழை பெய்துள்ளது. மேலும், கரூர் முக்கிய பகுதிகளான பேருந்து நிலையம், மண்மங்கலம், வெங்கமேடு, வாங்கப்பாளையம், புலியூர், காந்திகிராமம், தான்தோன்றி மலை,ராயனூர், சுக்காலியூர், வடிவேல் நகர், செம்மடை உள்ளிட்ட பகுதிகளில் மழை ஏதும் இல்லை.


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சில நாட்களே கரூர் மாவட்டத்தில் குறைந்த மழையின் அளவு பதிவாகி இருந்தது. மேலும் கடந்த சில நாட்களாக கரூர் மாவட்டத்தில் சில இடங்களைத் தவிர பெரும்பாலானங்களில் மழை பெய்யவில்லை என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


மேலும், வானிலை அறிக்கையின் படி பல்வே இடங்களில் அதிக அளவில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ள நிலையில் நாளை அல்லது நாளை மறுநாள் காவேரி ஆறு மற்றும் அமராவதி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க கூடும் என்பது அதிகாரிகளின் தகவலாக உள்ளது.