கரூர் மாவட்டம், பெரிய ஆண்டாங் கோவில் தடுப்பணைக்கு நீர்வரத்து சரிவு


திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் இருந்து காலை நிலவரப்படி வினாடிக்கு 351 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றில் வினாடிக்கு 400 கன அடி தண்ணீரும், புதிய பாசன வாய்க்காலில் 440 கன தண்ணீரும் திறக்கப்பட்டது. இதனால் கரூர் அருகே உள்ள பெரிய ஆண்டாங் கோவில் தடுப்பணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 132 கனஅடியாக குறைந்துள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 87.37 கனடியாக இருந்தது.


 





மாயனூர் கதவணையில் தண்ணீர் நீர்வரத்து நிலவரம். 


கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு நேற்று காலை நிலவரப்படி 1451 கன அடி தண்ணீர் வந்தது. இந்நிலையில் வினாடிக்கு இன்று காலை நிலவரப்படி மாயனூர் கதவனுக்கு 10 ஆயிரத்து 736 கன அடியாக தண்ணீர் வரத்து சற்று குறைந்துள்ளது. டெல்டா பாசன பகுதி சாகுபடி பணிக்காக காவிரி ஆற்றில் இருந்து 9,616 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்காலில் 1,120 கன அடி தண்ணீரும் தற்போது திறக்கப்பட்டுள்ளது. ஆகவே நேற்றை விட மாயனூர் கதவனுக்கு காவேரி ஆற்றின் நீர் வரத்து சற்று குறைந்துள்ளது.


 





நங்காஞ்சி அணையின் தண்ணீர் வரத்து நிலவரம்.


திண்டுக்கல் மாவட்டம், நங்காஞ்சி அணைக்கு, வடகாடு பகுதிகளில் மழை இல்லாததால் காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து ஏதும் இல்லை. மேலும், 39.37 கன அடி உயரம் கொண்ட நங்காஞ்சி அணையின் நீர்மட்டம் தற்போது 32.94 கனடியாக உள்ளது.


 



 ஆத்து பாளையம் அணையின் தற்போதைய தண்ணீரின் அளவு.



கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள கார் வாழி, ஆத்துப்பாளையம் அணைக்கு காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து எதுவும் இல்லை. மேலும் 26.90 கன அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 25.38 கனஅடியாக உள்ளது. ஆத்துப்பாளையம் அணையில் இருந்து நொய்யல் ஆற்றில் வினாடிக்கு 63 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி ஆறு மற்றும் காவிரி ஆற்றின் தண்ணீர் வரத்து நேற்றை விட சற்று குறைவாக உள்ளது.


 




 


மேலும், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பால் இன்னும் ஓரிரு நாளில் கரூர் மாவட்ட அமராவதி ஆற்றிலும்,காவிரி ஆற்றிலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தற்போது வரும் தண்ணீர் அளவை நாள்தோறும் கண்காணித்து வரும் அதிகாரிகள், பாச விவசாயத்திற்காக நாள்தோறும் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் பாசன பாசன விவசாயிகள் தங்கு தடையின்றி தங்களது விவசாயத்தை செய்து வருகின்றனர். மேலும், அமராவதி ஆறு காவிரி ஆற்று கரையோர பொதுமக்கள் தங்கள் தேவைக்காக நாள்தோறும் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிற மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் கரையோர பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பல்வேறு ஊராட்சிகளின் சார்பாக ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.