மேட்டூர் அணையில் முழு கொள்ளளவான 120 அடியை வெட்டுவதற்கு முன்பு 119 அடியில் காலை 5:00 மணிக்கு விநாடிக்கு 5,000 கனஅடி வீதம் திறக்கப்பட்டது. அதிகாலை 5:30 க்கு 10,000 கன அடி வீதமும், 6:00 மணிக்கு 15,000 கனஅடி யாகவும் அதிகரிக்கப்பட்டு. தற்போது விநாடிக்கு 20,000 கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணை நிரம்பி வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 117.86 அடியாக உள்ளது. எனவே, நாளை மாலைக்குள் தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என்று பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேற்று காலை மேட்டூர் அணையை பார்வையிட்டார். பின்னர், நீர்வரத்து, நீர் வெளியேற்றம் மற்றும் வெள்ள அபாயம் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், நேற்று மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118 அடியை நெருங்கி வரும் நிலையில் இன்று (09.11.2021) மாலை அல்லது இரவு முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு மேட்டூர் அணைக்கு வரும் அனைத்து நீர்களும் வெளியேற்றப்பட உள்ளதால் காவிரி ஆற்றின் அருகில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று கூறினார். காவிரி டெல்டா மாவட்டங்களான சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களுக்கு நீர்வள ஆராய்ச்சித்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 23 ஆம் தேதி மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டு 88 ஆண்டுகளில் நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் முதல் முறையாக அணையின் நீர்மட்டம் 67 ஆவது ஆண்டாக 100 அடியை எட்டியது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை முழு கொள்ளளவான 65 அடியையும், அதே போன்ற மற்றொரு அணையான கிருஷ்ணராஜ சாகர் அணை முழு கொள்ளளவான 124.8 அடியாக நிரம்பியுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 27,600 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணை இன்று முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில். அதற்கு முன்னதாக 119 அடி எட்டியவுடன் உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. காலை 5:00 மணிக்கு விநாடிக்கு 5,000 கன அடி வீதம் திறக்கப்பட்டது. 5:30 க்கு 10,000 கன அடி வீதமும், 6:00 மணிக்கு 15,000 கன அடி யாகவும் அதிகரிக்கப்பட்டு. தற்போது விநாடிக்கு 20,000 கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது .